பக்கம்:கழுமலப்போர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

தால், மக்கள் தம் உயிரையும் மதியாது அவனைக் காக்க முன் வந்துவிடுவரே. ஆகவே, இவனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுவதே நன்று என்று துணிந்தனர். அவ்வளவே, அத்தனை நாட்களாகக் காவற்காட்டில் பாடிக் கொண்டிருந்த பெரும்படையை மறுநாட்காலை பார்க்க முடியவில்லை. வெற்றி ஆர்வத்தோடு சோணாடு புகுந்த பெரும்படை, வெற்றாரவாரம் செய்துகொண்டே சேரநாடு நோக்கிச் சென்றுவிட்டது. போரிட வந்த கட்டி, போரிடாமலே புறமுதுகு காட்டி விட்டான்.[1]

போர் புரியாமலே புறமுதுகு காட்ட நேர்ந்ததே என்ற நினைப்பு நெஞ்சை வருத்தச் சேரநாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த கட்டியை, அந்நாட்டிலிருந்து வந்த நல்ல செய்தி ஒன்று வரவேற்றது. சேர நாட்டை அப்போது கணைக்கால் இரும்பொறை என்ற சிறந்த வீரன் ஒருவன் ஆண்டுகொண்டிருந்தான். அவனுக்கு சோணாட்டாட்சியைக் கைப்பற்றிக்கொள்ளவேண்டும் என்ற கருத்து இருந்தது. அதற்காகவே, இருநாடுகளுக்கும் இடைப்பட்ட இடமாகிய கழுமலம் என்ற நகரில் பெரிய கோட்டை ஒன்று அமைத்து, படைத் தலைவர் பலர் இருந்து நடத்திச் செல்லக்கூடிய பெரிய படையோடு அதில் காத்திருக்கிறான் என்பதை அறிந்தான். உடனே அவன் நட்பையும் நன்மதிப்பையும் பெற்றுவிட்டால் தன் நினைப்பு நிறைவேறிவிடும் என்று கருதினான். அவன் நட்பைப் பெறப் பெரிதும் விரும்பினான்.

அதற்கேற்ற சூழ்நிலையும் அவனுக்கு வாய்த்தது. அக்கணையனிடம், ஆரியப் பொருநன் என்ற மற்றொரு வட


  1. “வலிமிகு முன்பின் பாணனொடு, மலிதார்த்
    தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
    பாடின் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சிப்
    போர்அடு தானைக் கட்டி
    பொராஅது ஓடிய ஆர்ப்பு”

    —அகம் : 226
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/41&oldid=1359801" இலிருந்து மீள்விக்கப்பட்டது