பக்கம்:கழுமலப்போர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

கிடக்க, அவன் உடல் மட்டும் தனித்து வெளிப்பட்டு வீழ்ந்தது. அந்தோ! ஆரியப் பொருநன் உடல் அழிந்தது; அவன் உயிர் பிரிந்தது.[1]


வெல்ல வல்லார் இல்லை என வீறு பேசிய நண்பன் மறைவு கண்டு மன்னன் மனம் கலங்கினான். வந்தோன் நண்பன் வெல்ல, வேந்தன் நண்பன் உயிரிழப்பதா என்று எண்ணி நாணிற்று அவன் நல் உள்ளம். கணையன் ஒரு சிறந்த வீரன், சிறந்த வீரனை மதிக்கும் உயர்ந்த உள்ளம் உடையவன். அதனால், தன் நண்பன் உயிர் போக்கியவன் இப்பாணன்; அவன் உடன் வந்தவன் இக்கட்டி என அவர்மீது சினம் கொள்ளாது, என்னால் மதிக்கப் பெற்ற ஒரு மாபெரும் மல்வீரனை வெல்லும் பேராற்றல் பெற்றவன் இப்பாணன்; இப்பாணனைத் தன் நண்பனாகப் பெற்ற பெருமையுடையவன் இக்கட்டி என அவர்களை மதித்து வரவேற்றுச் சிறப்புச் செய்தான்.

கணைக்கால் இரும்பொறையின் அன்பைப் பெற்ற கட்டி, தன் வரலாற்றையும் விருப்பத்தையும் அவனுக்கு அறிவித்தான். கட்டி விருப்பமும் தன் விருப்பம் போலவே சோணாட்டரசைக் கைப்பற்றுவதே என அறிந்தான் கணையன். மேலும் அக்கட்டி ஒரு பெரிய படையோடு வந்திருப்பதையும் பார்த்தான். அவனாலும், அவன் படையாலும் தன் கருத்தும்

  1. பாணன்
    மல்லடு மார்பின் வலியுற வருந்தி
    எதிர்தலைக் கொண்ட் ஆரியப் பொருநன்
    நிறைத்திரள் முடிவுத்தோள் வையகத்து ஒழிந்த
    திறன்வேறு கிடக்கை நோக்கி, நற்போர்க்
    கணையன் நாணியாங்கு" —அகநானூறு : 386.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/43&oldid=1359824" இலிருந்து மீள்விக்கப்பட்டது