பக்கம்:கழுமலப்போர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

தான் அவன். இவ்வாறு பெரிய வீரனாய் விளங்கிய அவன், பெரிய யானைப் படையொன்றையும் பெற்றிருந்தான்.[1]

பழையன் இவ்வாறு பெருவீரனாய், பெரும்படை பெற்றவனாய் விளங்குவதை, அப்போது சோணாட்டை ஆண்டுவந்த செங்கணான் அறிந்தான். கொங்கு நாட்டுக் காவலனாகிய கணைக்கால் இரும்பொறையை வென்று கைப்பற்ற வேண்டும், அவனுக்குரிய கழுமலக்கோட்டையைப் பாழ்செய்தல் வேண்டும், இருவரும் செயல்களால் சோழர்களின் வெற்றிப் புகழை விளங்கக் காட்டுதல் வேண்டும் என்ற ஆசையுடையவன் அச்செங்கணான். அவ்வாசை கொண்ட அவன், அதை முடிக்க வேண்டுமேல், பகைவனின் பெரிய படைகளையும், படைத்தலைவர் பலரையும் வெல்ல வல்ல வீரன் ஒருவனே தன் படைக்குத் தலைவனாய் அமைதல் வேண்டும் என்று உணர்ந்தான்! அதனால், போரூர் சென்று பழையனைத் தன் படைக்குத் தலைமை தாங்குமாறு வேண்டிக் கொண்டான். அவனும் அதற்கு இசைந்து, தன் யானைப் படையோடு வந்து சோழர் படைத் தலைமையை ஏற்றுக்கொண்டான்.


  1. “வென்வேல்,
    இழை அணி யானைச் சோழன் மறவன்
    சுழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப்
    புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
    பழையன் ஓக்கிய வேல்போல்
    பிழையல.” —அகநானூறு : 326

    “வென்வேல்
    மாரி அம்பின், மழைத்தோல் பழையன்
    காவிரி வைப்பின் போஒர்.” —அகநானூறு : 186

    “கொற்றச் சோழர், கொங்கர்ப் பணீஇயர்
    வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன்
    பழையன் வேல்வாய்த்தன்ன, நின்
    பிழையா நன்மொழி” —நற்றிணை : 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/45&oldid=1377020" இலிருந்து மீள்விக்கப்பட்டது