பக்கம்:கழுமலப்போர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

பவளம் சொரியும் பை :

நெடிய பெரிய தேர்ப் படை நிலைகுலைந்ததைக் கண்டனர், சோணாட்டுப் படை மறவர். சேர வேந்தர்களின் வேழப் படையின் வன்மையினை வாய்மொழியாக முன்னரே கேட்டிருந்த அவர்கள், அதைக் கண்ணெதிரே காணவும் நேர்ந்த விடத்து, அவர் நெஞ்சு நடுங்கிற்று. தேர்ப்படையையும் தகர்த்தெறியவல்ல திண்மை அக்களிறுகளுக்கு அவற்றின் பருவுடவால் வாய்த்தமை கண்டு வெம்பிற்று. அவர் உள்ளம் களிறுகளின் பருவுடல் கண்டு பெருமூச்செறிந்த வீரர் அப்பருவுடலைப் பேணுதற்கு வேண்டும் பேருணவைத் தேடியுண்பது அவற்றின் துதிக்கைகள் என அறிந்தவிடத்து அவர் சினம் அத்துதிக்கைகள்பால் சென்றது. எட்டிய மட்டும் நீட்டி, எவ்வளவு திண்ணிய மரங்களையும் முறித்துக் கவளங் கவளங்களாய் வாயிலிட்டு ஊட்டி உயிர்புரக்கும் அவையில்லையேல், களிற்றினம் தம் பருவுடலுக்கு வேண்டும் உணவு பெறாமல் உயிரிழந்துபோம். அவற்றின் உரமும் அற்றுப்போம். அந் நிலை உண்டாகாவாறு பேணிக் காக்கின்றன அவற்றின் தொங்குக் கைகள். அதனால் பெருவலி பெற்ற யானைகள் நெடிய தேர்களையும் தாக்கி அழிக்கும் ஆற்றல் உடையவாகின்றன. ஆகவே, வேழப்படை வீழ வேண்டுமாயின், அவற்றின் கைகள் அறுபடல் வேண்டும் எப்பாடுபட்டேனும் அவற்றைத் துண்டாடல் வேண்டும், எனத் துணிந்தனர். உடனே, உயிருக்கும் அஞ்சாது வாளேந்தி விரைந்தனர். வேழங்களின் துதிக்கைகளே குறியாக நின்று வெஞ்சமர் புரிந்து, இறுதியில் அவற்றை வெட்டி வீழ்த்தினர்.

தொங்கும் துதிக்கை இடையே துண்டிக்கப் பெற்று வீழ்ந்தது. வெட்டுண்டு விழுப்புண் பெற்ற பகுதியினின்றும் ஒண்ணிறக் குருதி குபுகுபுவென வெளிப்பட்டுக் கொட்டத் தொடங்கிற்று. அக்காட்சி, கண்ணால் காணமாட்டாக் கொடுமையுடையவேனும், அது, பொன்னும் நவமணியும் விற்கும் பெருவணிகர் வீதியில், பவள வாணிகர், தம்மிடம்

க. போ.—4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/55&oldid=1359956" இலிருந்து மீள்விக்கப்பட்டது