பக்கம்:கழுமலப்போர்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

இருத்தல் வேண்டும். அந்நலத்தை இழந்துவிட்டார்கள் சேரர். சோணாட்டின் நலம் கண்டு காய்ந்தனர். இறுதியில் உள்ள நலமும் போயிற்று. சேரரின் இந்நினைப்புக் கேட்டால், இருவர் நாட்டு தலங்களும் நலிவுற்றன.

இதைக் கண்டாள் நிலம் என்னும் நல்லாள். “நலம் அளிக்க நான் இருக்க, என்பால் நல்லற நெறி நின்று தொழிலாற்றிப் பயன் பெறாது, காய்தலைக் கருத்தில் கொண்டு களம் புகுந்து, அந்தோ தாமும் கெடுகின்றனர்; பிறரையும் கெடுக் கின்றனர்; என்னே இவர்தம் கெடுமதி!” என்று எண்ணினாள். அவரைக் காணவும் நாணினாள் ஒருபுறம்; மாறாச் சினம் கொண்டாள், மறுபுறம். உடனே நெந்நிறப் போர்வை ஒன்றை எடுத்துத் தன் உருத்தெரியாவாறு போர்த்துக்கொண்டாள். அக்காட்சியே, களக் காட்சியைக் காண்பவர் கருத்தில் தோன்றிற்று.

“மை இல் மாமேனி நிலம் என்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள் போல் செவ்வந்தாள்—பொய்தீர்ந்த
பூந்தார் முரசின் பொருபுனல் நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து,” —களவழி : 32

குன்றின் மேல் குருவிக்கூட்டம் :

கொம்புள்ளவற்றிற்கு ஐந்தும், குதிரைகளுக்குப் பத்தும் என்றால், யானைகளுக்கு ஆயிரம் முழம் இடைவெளி வேண்டும் என்று கூறுவார்கள் அறிந்தவர்கள். நன்கு பழக்கப் பெற்றும் நாட்டு மக்களிடையே கலந்து வாழக் கற்றுக்கொண்ட யானைக்கு, அதுவும், அது மதம் படாத காலத்தில் கூறிய வரையறை இது. அது மதம் பட்டுத் திரியும் காலத்தில் ஓராயிரம் ஆறயிரமாக நீளவேண்டி நேரிடும். போர்க்களம் புகாத யானைக்கே இது என்றால், போருக்கு என்றே பழகிய யானைகளுக்கு, போரில் பேராற்றல் காட்டிப் போரிட வேண்டும் என்ற கருத்தோடு, வெறியூட்டி விடப்பட்ட நிலையில், அவற் றின் கண்ணில் படாத இடத்தில் இருப்பதே நன்று. போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/77&oldid=1365135" இலிருந்து மீள்விக்கப்பட்டது