பக்கம்:கவிகளின் காட்சி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது I () i கனி வரும் கருனைஎன்னும்கடலில் அன்பு என்னும்ஆற்றில் பனிவரும் கண்ணிர் வெள்ளம் பாய்ந்திட இன்பத்து ஆழ்ந்தார். பைத்தலை விடவாய் காகம் பல்பொறி மஞ்ஞை கால்வாய் மத்தமான் அரிமான் புல்வாய் வல்லியம் மருட்கை எய்தித் தத்தமாறு அறியா வாகித் தலைத்தலே மயங்கிச் சோர இத்தகை மாவும் புள்ளும் இசைவலைப் பட்ட அம்மா! (5) வன்தரை கிழிய வீழ்போய் வான்சினே கரிந்து கின்ற ஒன்றறி மரங்கள் எல்லாம் செவியறிவு உடைய ஆகி மென்தளிர் ஈன்று போது விரிந்து கண்ணிரும் சோர நன்றறி மாந்தர் போல நகைமுகம் மலர்ந்த மாதோ. (6) வாழிய உலகின் வானேர் மனிதர்புள் விலங்கு மற்றும் ஆழிய கரணம் எல்லாம் அசைவற அடங்கி ஐயன் ஏழிசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம் ஊழியில் ஒருவன் தாள்புக்கு ஒடுங்கிய தன்மை ஒத்த, (7) கண்ணிறை துதலோன் சாம கண்டத்தின் எழுந்தமுல்லைப் பண்ணிறை தேவ கீதம் சராசர உயிரும் பாரும் விண்ணிறை திசைகள் எட்டும் விழுங்கித்தன் மயமே ஆக்கி உண்ணிறைஉயிரும் மெய்யும உருக்கியது இசைவல்லானே. (திருவிளேயாடல், விறகு விற்ற படலம்) சொக்கநாதன் பாடிய கீதத்தைக் கேட்டு அகில சரா சாங்களும் சொக்கியுள்ள நிலைகளை இக்கப் பாசுரங்கள் சுவையா வரைந்து காட்டியுள்ளன. அரிய பெரிய இசை வாணர்கள் கூர்ந்த ஒர்க்க தேர்ந்து தெளியவுரிய நாக மரு மங்கள் பல இக் கீதத்தில் விளைந்திருக்கின்றன. எழு சுரங் களின் தரங்களும், மக்காரம் பஞ்சமம் மத்திமம் தாரம் முதலிய ஓசைத் துறைகளும், அமைதி, கமகம், அனுக்கல், குனித்தல், இழைத்தல், சுழித்தல் முதலிய குரல் ஒலிகளின் கிரல்களும் இனிய பல குணங்களும் இப் புனிதனுடைய