பக்கம்:கவிகளின் காட்சி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கவிகளின் காட்சி கிரு.ர். தமிழ் இயல்பு இனிய சுகபோகங்களோடு உயர் வாய் ஒளி மிகுக் த இயல்பா இசைக்து இனிது மிளிர்கிறது. இமிழ்திரை வையத்து ஏயர் பெருமகன தமிழ் இயல் வழக்கினன். (பெருங்கதை, 4, 17) அன்பு நலம் சுரங்க இன்பவழி ஒழுகுபவன் என உத. யண மன்னனைக் கொங்கு வேளிர் இங்ங்னம் உரைத்துள் வளார். தமிழின் இயல்பு அமிழ்தின் சுவையாப்அமைந்துளது. கோன் கிலே திரிந்து கோடை டிேனும் தான் கிலே திரியாத் தண்தமிழ்ப்பாவை. (மணிமேகலை). காவிரி நதியைச் சாத்தனர் இவ்வாறு சாற்றியுள்ளார். தண்மையான நீர்மையும் உண்மையான சீர்மையும் ஒண்மை யான மேன்மையும் ஈண்டு இவ்வாறு உணர வந்தன. பொன்பால் பொருவும விரைஅல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது தன்பால் தழுவும் குழல் வண்டு தமிழ்ப்பாட்டு இசைக்கும.தாமரையே! என்பால் இல்லை. அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்புடைய உன்பால் இல்லை எனறக்கால் ஒளிப்பாரோடும் உறவுண்டோ? இராமா, கிட்கிந்தா, பம்பை 28} தனது அருமை மனைவியைப் பிரிந்த இராமன் பம்பைப் பொய்கையை அடைந்தபோது அங்கே மலர்ந்திருந்த செக் தாமரையை நோக்கி இங்கனம் மறுகி உரையாடியிருக் கிருன். பொருள் கிலைகளைக் கருதி உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கே தமிழ்ப்பாட்டு என்றது இனிமையான இசையை. மொழியின் சுவை அமுதின் தெளிவா வந்தது.