பக்கம்:கவிகளின் காட்சி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 கவிகளின் காட்சி தள்ளி இசை தாபிக்கத் தக்கவரார்? தென்மதுரைக்கு உள் இருந்த சொக்கர் உனக்கு உள் அன்ருே?" (தமிழ் விடு துாது) தமிழ் மொழிக்கும் சிவபெருமானுக்கும் உள்ள உற வுரிமைகளை இவை சுவையா வரை ங் து காட்டியுள்ளன. காட் சிகளும் கருத்துகளும் குறிப்புகளும் கூர்ந்து ஒர்ந்து கொள் ள வுரியன. அருளாடல்கள் பொருளோடு மிளிர்கின்றன. பரமன் தருமிக்கு அருளிய தகைமையும், கீரளுேடு எதிர்ந்து வாதாடிய வகைமையும், பாணபத்திரனுக்கு இரங் கிச் சேர மன்னனுக்கு ஒரு சீட்டுக் கவி கொடுத்த சீர்மை யும், அகப்பொருள் இலக்கணம் உகப்பொடு செப் சளித்த நீர்மையும், பாண்டிய மன்னன் கன்னே மதிக்கவில்லை என்று வருக்தி கொந்து போன இடைக் காடர் என்னும் புலவர் பின்னே பரிந்து போன பான்மையும், இசை வாணனக் காக்கும் பொருட்டு விறகு விற்கும் கிழவனப் வந்து இனிய இசை பாடிய மேன்மையும் இங்கே தெளிவாய்த் தெரிய வந்துள்ளன. தமிழ்மொழிமேல் கான் கொண்டுள்ள பிரியத் திகுலேயே இறைவன் இவ்வாறு இனிய உறவுரிமைகளோடு உவந்து புரிந்துள்ளான். அருள் நலம் கனிக்க உண்மைகளைப் பொருள் வளங்களோடு ஈண்டு அறிந்து கொள்ளுகிருேம். தமிழ்மொழியின் இனிமையையும் மகிமையையும் புனித திலைமையையும் இந் நூலாசிரியர் நன்னயமாவிளக்கியுள்ளார். மதுரைக்கு உள் இருக்கும் சொக்கர் உனக்கு உள் அன் ருே? என்று தமிழை நோக்கி வினவி யிருக்கிரு.ர். இந்தக் கேள்வியைச் சிக்தனை செய்து உணர்பவர் தமிழ் மொழிக் .கும் சிவ பெருமானுக்கும் உள்ள உறவுரிமைகளை ஊன்றி நோக்கி உண்மை தெளிந்து உள்ளம் மகிழ்ந்து கொள்வர்.