பக்கம்:கவிகளின் காட்சி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தாய் மொழி 11. குழுவுதுண்தொளே வேயினும் குறிகரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொற்கிளியே! முழுவதும்மலர் விரிந்தன முருக்கிடை மிடைந்த பழுவம் வெங்கனல் கதுவியது ஒப்பது பாராய் ! (இராமா, அயோத்தி, சித்திர 28) சீதை சொல் யாழினும் இனியது என்று இது குறித் தள்ளது. விழுமிய வாய்மொழி வியனப் விளைந்தது. இங்கே தண்மையும் மென்மையும் இனிமையும் இயல் பாகவுடைய தமிழ் என வந்துள்ளது நன்கு சிக்கிக்கவுரியது. தமிழ் என்னும் சொல்லை இனிமை இன்பம் இதம் உதவி குளிர்ச்சி உவகை முதலிய உயர் கிலைகளிலேயே கவிகள் அசதி கி. ட T வழங்கி வங் தள்ளனர்; அவ்வுண்மையை உள்ளம் கூர்ந்து ஒர்க்க உணர்ந்து கொள்ளுகிருேம். இ ரு ண் டு மருண்டு மனிதன் இழிந்த போகாமல் தெருண்டு தெளிந்து உயர்ந்து கொள்ளும்படி ஒளி மண்டலமாய் மொழி ஒங்கி ஒளிர்கிறது. அதன் வழியே யாவும் இயங்கி வருகின்றன. "ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி எங்கொலிர்ே ஞாலத்து இருள் அகற்றும---ஆங்கவற்றுன் மின்னேர் தனிஆழி வெங்கதிர் ஒன அறு ஏனேயது தன்னேர் இலாத தமிழ் ” (தொல்லியல்) சூரியன் உலக இருக நீக்கி ஒளி செய்கிருன்; தமிழ் மடமை இருளை நீக்கி மாக்கர்க்கு அருள்புரிகிறது என இது அருளியுளது. கனக்கு உவமையில்லாத இறைவன் போலத் தனக்கு நிகர் இல்லாதது எனத் தமிழை இங்கே குறித்திருப் பது கூர்ந்து சிந்தித்த ஒர்க்க உணரத்தக்கது. நேர் இன்மையால் சீரிய தலைமை தெரிய வந்தது.