பக்கம்:கவிகளின் காட்சி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தாய் மொழி 13. உலக வாழ்க்கைக்குப் பொருள் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மொழி. பொருளே ஈட்டி வாழ்பவன் செல்வகுப்ச் சிறந்து திகழ்கிருன்; மொழியைப் போற்றி வாழ்பவன் நல்ல அறிஞய்ை உயர்ந்து விளங்குகிருன். தன் கருக்கைப் பிறர்க்கு உணர்க்கவும் பிறர் கருத்தைக் தான் உணர்ந்து கொள்ளவும் மொழி கணையாப் கின்று: மனிதனுடைய வாழ்வை இனிது கடத்தி வருகிறது. அவ் வரவை நுனித்து உணர்பவன் அதன் மகிமையை மதித்து மகிழ்வார். உணரும் அளவு ஒருவன் மனிதன் ஆகிருன்; உணர்வு ஒழியின் அவன் மிருகமாய் இழிகிருன். மொழி தெரியாதவன் விழி தெரியாக குருடனப் இழிவுறுகின்ருன். நமது மொழி பேச்சு வழக்கோடு மாத்திரம் நின்று: விடவில்லை; அரிய பல அறிவு நலங்களை அருளிப் பெரிய மேன்மைகளை விளக்க வருகிறது. சிறந்த மேதைகளுடைய மேதாவிலாசங்கள் எல்லா வழிகளிலும் நிறைந்த என்றும் உயர் கனிச் செம்மொழியாய் எங்கும் ஒளி வீசியுள்ளது. இதன் பழைய மகிமை கழிய நேர்ந்தது ஆயினும் புதிய நிலையாலும் அதிசய மேதைகளை அடைந்து மதி நலங்கள் கிறைந்து எவரும் துதிசெய்து வரும்படி தொடர்ந்து கிம் கிறது. பழமையின் வளமையைக் கிழமை கூர்ந்து காண் பவர் உளம் மிக உவந்து உயர்வினை ஒர்ந்து கொள்ளுவர். விரிந்து பரந்த நிலமண்டலம் எங்கனும் அறிவொளி விெ விழுமிய ஒளி மண்டலம் போல் இம்மொழி முன்னம் உயர்த்திருக்கது. பண்டு விளங்கியிருந்த மேன்மையும் இன்று மழுங்கி யுள்ள தாழ்மையும் கடலும் குளமும் போல் ந்ேரே தோன்றி நிலைமைகளைத் திலக்கி கிற்கின்றன.