பக்கம்:கவிகளின் காட்சி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கவிகளின் காட்சி பாண்டிய மன்னனே கல்லுருத்திரனர் என்னும் சங்கப் புல வர் இங்வனம் உளம் உவந்து வியந்து புகழ்ந்திருக்கிரு.ர். தென்னவன் என்று பாண்டிய மன்னனுக்கு வந்தள்ள பெயரே முன்னே ஊழியில் தென் திசையில் அம்மரபினர் மாட்சி யோடு ஆட்சி புரிந்து வந்துள்ளதைக் காட்சியாக் காட்டிக் கடல்கோள் நிலைகளைத் தெளிவா விளக்கியுள்ளது. தென்திசையை ஆண்டுவந்த சீர்மையினல் வழுதி மன்னர் தென்னர் என்ன கின்றிசைகள் திசைகள்தொறும் நெடிதோங்கி கிகிலத்துவர கிலவி கின் ருர்; அன்றிசையின் தமிழ்மொழியை அவர் பேணி ஆதரித்த அருமை யாலே இன்றிசைகம் மென்மொழியைத் தென்மொழி என்று எம்மொழியும் இயம்பு மனறே. ஆண்டு வந்த அரசும், நீண்டு கின்ற கிலமும், பூண்டி ருக்க மொழியும் ஈண்டு நுண்ணிகா எண்ணி ஆராயவுரியன. எழாயிரமைல்கள் அளவாயிருந்த கிலம் பாழாகி இப் பொழுது நீராழியாயுள்ளது. தென்கடல் என்றும் இந்து மகா சமுத்திரம் என்றும் அது வழங்கப்படுகிறது. பண்டு பாண்டிய மன்னருக்கு உரிமையாய்த் தென்பால் சீண்டு பாக்திருக்க செடிய நில மண்டலத்தை லெமூரியாக் கண்டம் என ஆங்கிலேயர் இன்று வழங்கி வருகின்றனர், அந்தச் சலப்பிரளயம் சேர்ந்த ஏழாயிரத்த எண்ணுாறு ஆண்டு களுக்கு மேல் ஆகின்றது என்று கில நூல் வல்லார் விஞ் ஞான முறையில் ஆராய்ந்த விவரமாக் கூறுகின்றனர்.