பக்கம்:கவிகளின் காட்சி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது அதிகாரம். இறையனர். உலக முதல்வன் கழக முதல்வனப் நிலவியிருந்து அதி சய விகுேதங்களா அலகிலருளாடல்கள் புரிந்துள்ளான். முதல் சங்கத்தில் குழுமியிருக்க புலவர் எல்லாருக்கும் தலைவராய் அகத்திய முனிவர் நிலவியிருந்தார். அவர் சிவ பெருமான் பாலும் முருகக் கடவுளிடத்தும் அரிய வர பலங் களை அடைந்தவர். அறிவின் பொருள்களை ஆராய சேர்க்க புலவர்கள் அங்கே கூடும் போதெல்லாம் சிவபெருமானையும் முருக வேளையும் துதி செப்கே தொடங்குவர். ஆகவே பரம் பதியும், குமரவேளும் சங்கப் புலவர்களுள் தனிமுதல் தலைவர் என நேர்ந்தனர். தலைமை தகவாப் நிலவியது. செந்தமிழ்த் தெய்வம், செந்தமிழ்ப் பரமாசாரியன் என இந்தத் தந்தையையும் மைந்தனையும் உலகம் வங்கனே செய்து வருகிறது. அவ்வரவு உரிமையான மரபாப் உறவுதோய்க்க வந்துள்ளது. எல்லா மொழிகளுக்கும், எல்லா உயிர்களுக் கும் என்றும் எங்கும் இறைவன் உரியவனே ஆலுைம் தமிழ்மொழிக்குத் தனி உரிமை நாயகனய்ச் சிவபெருமான் இனிது அமர்ந்து கனி புரந்துள்ளார். a தென் மொழிக்கும் தென்னர் குல மன்னர்களுக்கும் தென்னுட்டுக்கும் சிவன் உரிமையா யிருப்பதை அரச மரபு வரிசையா உணர்த்தி வருகிறது. பல நூல்களும் இத்தொடர் புகளைத் துலக்கி நிலைமைகளை விளக்கி வருகின்றன. கென்னடு உடைய சிவனே! எங்காட்டவர்க்கும் இறைவா! (திருவாசகம்)