பக்கம்:கவிகளின் காட்சி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இறையனர் 29. உள்ளே ஒருதி உளது.எனத் தெளிவாய் நீர்நிறை கூவம் நேரே காணின் ஒர்மகன் அகழ்ந்ததை ஒர்ந்து கொள்வாய் விளேபயிர் கிலேயை விழியால் அறியின் 15 உழவன் ஒருவன் உளன் என ஒர்வாய் இன்ன கிலேகள் இனனவாறு உணர்தல் போல் உலக இயக்கம் ஒருமுதல் உண்மையை நலனுற உணர்த்தும் நயமரீ தெளிந்து கலக மயக்கம் களேந்து 20 அலகில் இன்ப அமைதியை அடைக. இதன் பொருளை ஒர்க் து உணர்ந்து பரம் பொருளைத் தேர்ந்து தெளிந்து சிறந்து உயர்ந்து கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உளன் என நம்புவ தால் மனிதனுடைய உள்ளம் உறுதிகலங்களே காடி உயர்ந்து கொள்கிறது. தெய்வ சிக்தனை திவ்விய கிலேயில் உயர்த்து கிறது. எண்ணம் உயர மனிதன் எவ்வழியும் உயர்கிருன். தெய்வம் ஒன்றே. எங்கும் நிறைந்து என்றும் உள்ள பொருள் ஒன்றே. அதற்கு மக்கள் இட்டுள்ள பெயர்கள் பல. கேசங்கள் தோறும் பாஷைகள் தோறும் வேறு வேறு பேர்களைச் சூட்டி மாந்தர் அதனைப் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். சீவான்மா அன்புரிமையோடு கருதி வரும் அளவு பரமான்மா அருள் புரிந்து அதன்பால் ஒளி வீசிவருகிறது. குழந்தையும் தெய்வமும் கொண்டனைத்த இடம் என் பது பழமொழி. கன்னத் தழுவி எடுத்தவரை இளங்குழவி ஒட்டிக் கொள்ளும்; அதுபோல் உள்ளம் உருகித் தன்னைக் கருதுகின்றவரை இறைவன் இயல்பா மருவிக்கொள்கிருன்.