பக்கம்:கவிகளின் காட்சி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கவிகளின் காட்சி அன்பினில் விளைந்த ஆரமுதே' என்று ஈசனை மாணிக்க வாசகர் இவ்வாறு ஆர்வததோடு கூறியிருக்கிரு.ர். இந்த அனுபவ வாசகம் துணுகி ஒர்ந்து இனிது சிந்திக்கத்தக்கது. பாண்டிய மன்னர் கருமநீதி யுடையவர்; தன் உயி ரைப் போலவே மன்னுயிர்களை நன்னயமாப் புரந்து வந்த் வர்; சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவர்; அரசியல் முறைகளிலும் அறிவியல் துறைகளிலும் யாதொரு குறை யும் நேராதபடி இறைவனைக் கருதியே எவ்வழியும் தொழில் புரிந்து வந்துள்ளனர். நிலவணிக்க நின்மலனைத் தம் குல தெய்வமாக் கொண்டாடி யாண்டும் பேணியிருக்கின்றனர். உழுவலன்போடு வழுதி மன்னர் இங்ங்னம் தொழுது, வந்தமையால் அவருடைய கல்விக் கழகத்தில் பரமன் பிரிய மாய்த் தலைமை தாங்கி கிலேயா அருள் புரிந்து வந்தான். இறைவன் வாலறிவன் ஆதலால் நூலறிவாளரோடு உரிமையாய்க் கூடியிருந்து சங்க நூல்களை நன்கு ஆப்க்க தண்ணளி புரிந்து எண்ணரிய ஆடல்களை இசைத்தருளினன். 'கண்ணுதல் கடவுள் அண்ணலங் குறுமுனி முனைவேல் முருகன் என இவர் முதலிய திருந்து மொழிப்புலவர் அருங்தமிழ் ஆய்ந்த சங்கம் என்னும் துங்கமலி கடல்' (சங்ககிலே) கண்ணுதல் கடவுளும் முருக வேளும் கலைமைப் புலவ ராப் வீற்றிருந்தமையை இது விளக்கியுள்ளது. தமிழ் மொழி தெய்வ ஒளிகளில் திவ்வியமாய் வளர்ந்து வந்துள்ள அ; அவ்வுண்மையை இதல்ை உணர்ந்து கொள்ளுகிருேம். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் 1 பெருமலே பொடித்த பொருவரு முருகனும் - உரிமையின் மருவி ஒளிபுரிங் திருந்த