பக்கம்:கவிகளின் காட்சி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இறையனர் 3}. செந்தமிழ்க் கழகம் முந்தமிழ் தென்ன வந்து விளங்த மதியுயர் கலைகளே வாரி விழுங்கி வாரி என்னும் பேரியல் துலக்கிப் பெருகிப் பாரியல் துலங்கப் பரவி யின் அளதே. சிவபெருமான் தமிழ்ச் சங்கக் கலைவனுயிருந்து கலை வளர்த் தள்ள காட்சியை இங்கே கண்டு மகிழ்கின் ருேம். அரிய இனிய அமுகங்கள் என அறிவு நலங்கள் பெருகி யிருந்த சீரிய நூல்களை எல்லாம் வாரியில் இழந்து தமிழர் மறுகியுள்ளனர். இங்க மறுக்கம் பண்டைத் தமிழ் மக்களி டம் பெருக்கமாய்ப் பெருகியிருக்கது; தமிழின் அருமையை ஒரு சிறிதும் அறியாக இன்று அது அருகிப் போயது. கண் இருந்தவர் கண்ணுேடி இரங்கினர்; அதனை இழந்தவர் யாதும் கவலாமல் ஏதும் தெரியாமல் உவந்து திரிகின்ருர். வாலறிவனப் யாவும் அறிய வுரிய மேலான பரமன் தமிழ் மொழியைச் சாலவும் விழைக்க தனது இயல்பான அருவ நிலையை ஒருவி அழகிய உருவனப் வந்து புலவர் பெருமான் என அமர்ந்து கலைகளை ஆய்ந்து கழகத் தலைவன் என்று உலகம் புகழ ஒளிபுரிந்து இருந்த நிலைமையை எண்ணி யுணர்வார் எவரும் தமிழின் புண்ணிய நீர்மையையும் புனித கிலையையும் எண்ணி மகிழ்ந்து இன்பம் மீதுணர்வார். கண்ணுதற்பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணு றத்தெரிந்து ஆய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனே மண்ணிடைசிசில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ. (திருவிளேயாடல், நாடு, 57) தமிழின் மகிமையைப் பரஞ்சோதி முனிவர் இவ்வாறு: செவ்வையா இனிது விளக்கியிருக்கிரு.ர். சிவபெருமான்