பக்கம்:கவிகளின் காட்சி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கவிகளின் காட்சி தமிழ் மொழியில் உவகையாய் உரிமை கொண்டுள்ள அருமையைக் கருதி யுணரும் தோறும் பெரிதும் வியந்து வருகிருேம். உலகமுதல்வன் கழகமுதல்வன் என நிலவிஞன். பண்டிருந்த தமிழ்ச்சங்கம் பரமனருள் ஒளிவழியே பல்லாண் டோங்கி மண்டுபுகழ் ஒளிவீசி மதி நூல்கள் பலபயந்து மகிமை தோய்ந்து எண்டிசையும எவ்வழியும் இரவிஎனத் தனிநிலையில் இனிது லாவிக் - கண்டிருந்த மாட்சியினே க் காட்சியால் காணுவார் கதிமுன் காண்பார். இதனை ஈண்டு உரிமையோடு கருதி யுணர வேண்டும். அங்கமும் ஆகியும் இல்லாத அந்தப் பரமபதி செந்தமிழ்க் கவிஞன் என்னும் பேரைப் பெறப் பேராவல் பூண்டுள் ளார். அந்த ஆரா ஆர்வத்தை ஒர்க்க பெரியோர்கள் உரிய மொழியோடு சேர்த்துத் தண்டமிழ்ப் புலவன், பசுந்தமிழ்ப் பாவலன், அருந்தமிழ் அறிஞன், பெருந்தமிழ்க் கவிஞன், தீக் தமிழ் வேந்தன், செந்தமிழ்த் தெய்வம், என இந்தவாறு சிவ. பெருமானைச் சிறப்பாத் துதித்தப் போற்றி வரலாயினர். செந்தமிழ்த்திறம் வல்லிரோ? அந்தி வானமும் மேனியோ? (தேவாரம்) சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனை இந்தவாறு உரி மையோடு வினவி யிருக்கிரு.ர். எல்லாம் வல்ல அவரைத் தமிழில் வல்லவர் என்றது. இக்க மொழியில் அந்த மூர்த்தி கொண்டிருக்கும் உறவுரிமையை உணர்த்தி நின்றது. "குழலும் யாழும் அமிழ் அம் புகுத்த பவளக் கடிகையில் தவளம் கிரைத்தொட்டத் துவர்வாய்ப் பாணகை அணங்கு அணங்குறுத்த