பக்கம்:கவிகளின் காட்சி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. இறையனர்

35


ரோடு பாண்டி நாட்டை ஆண்டாள். கன்னியாப் இருக்ச அரசு புரிந்தமையால் இத்தேசம் கன்னிநாடு என மன்னி கின்றது. அதிசய நிலையில் விளங்கியிருந்த அந்த அரசிளங்குமரியை மணந்து கொள்ள விழைந்து இறைவன் வழுதி வேந்தனாய் விழுமிய நிலையில் வந்தான். சவுந்தரபாண்டியன் என்னும் பெயரோடு விளங்கி அரசியை மணக்க வரிசை யோடு அரசு புரிந்தான். அரிய பலவளங்கள் பெருகி வந்தன: உரிய ஒரு மகனும் பிறந்தான்; உக்கிரகுமாரபாண்டியன் என்று பேர் பெற்ருன். அத்திருமகன் முருகன் அமிசம். தாயும் தக்கையும் முன்னதாகவே மன்னர் குலத்தில் மருவி யுள்ளமையால் அச்சேயும் உரிமையோடு வந்த குமரனாய்த் தோன்றினன். தென்னாடு சிறந்து விளங்கியது; எங்நாடும் எத்தி நின்றது; பொன் னாடும் இதனைப் புகழ்ந்து வந்தது.

பிறவா யாக்கைப் பெரியோன் என்று பேர் பெற்றிருக்க பெருமான் மாறனய் மாறி இவ்வாறு உறவுரிமைகளோடு ஒளி பெற்றிருந்தது அம்மரபின் மகிமையை விளக்கிநின்றது.

பெருநீர் வையை வளைநீர்க் கூடல்
உடல் உயிர் என்ன உறை தரு நாயகன் கடுக்கைமலர் மாற்றி வேப்பலர் சூடி
ஐவாய்க் காப்புவிட்டு அணிபூண் அணிந்து விரிசடை மறைத்து மணிமுடி கவித்து விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து
வழுதி ஆகி முழுதுலகு அளிக்கும்
பேரருள் நாயகன்.

(கல்லாடம்2)

முழுமுதல் பரமன் வழுதியாய் மாறி உலகை ஆண் டுள்ள நிலையைக் கல்லாடர் இவ்வாறு எழுதிக் காட்டியிருக்கிறார். கடுக்கை=கொன்றை. ஐவாப் என்றது. பாம்பை, உரககங்கணன் என்னும் பழையபேர் இங்கே நீங்கிப்போயது.