பக்கம்:கவிகளின் காட்சி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது அதிகாரம். இறையனர் அகப்பொருள். சங்கப்புலவர் தலைவராயிருக்க இறைவர்ை இக்க நூலைச் செய்திருக்கிரு.ர். அவர் பெயரால் இயங்கி வருகிறது; இது அறுபது சூத்திரங்கள் அமைக்க து; அகப்பொருளை விரித்த உரைப்பது: அழகிய ஒரு கருன மங்கையும் அறிவு நலங் கனிக்க விழுமிய ஒரு குமரனும் ஒருநாள் இயல்பாப் நேரே கண்டனர்; காணவே இருவரும் ஒருங்கே காதல் மீக்கொண் டனர்; பருகு காதலோடு ஒருவரை ஒருவர் பிரியமாப் விரும்பவே உருகிய அன்போடு மருவி மகிழ்ந்தனர். கொ டுப்பாரும் அருப்பாரு மின்றிக் காமாகவே உவந்து விழைந்து இவ்வாறு கலந்து மகிழ்ந்தவர் பின்பு உலகம் அறியமனங்து அலகிலின் பங்களை நுகர்ந்து மனே வாழ்க்கை புரிந்தார். அங்க னம் புரிந்து வருங்கால் தலைவன் பொருள் முதலியன ஈட்டி வரும் பொருட்டு அயலே பிரிந்தான்; அந்தப் பிரிவில் தலைவி பெரிதும் மறுகியிருக்காள்; காரியங்களை முடித்துத் தலைவன் மீண்டு வங்கான்; வரவே மழை கண்ட பயிர் போல் புயல் கண்ட மயில்போல் தலைவி உவகை மீதுளர்ந்து அவனை இனித பேணினுள்; அதன்பின் உழுவலன்புடையராய்க் கிழமை யோடு கழுவி இன்புடன் வாழ்க்தார். அன்பு கலங்கனிந்த அந்த இன்ப வாழ்வுகளை இங்க ஆால் இனிது விளக்கியுள்ளது. திருக்குறள் போல் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிந்துள்ளமையால் இக்துரல் தமிழின் நீர்மை முழுவதும் ர்ேமையாய்த் தழுவி வக்கது எனத் தனிச் சிறப்படைந்துள் ளது. இதற்கு நக்கீரனர் சிறந்த உரை செய்திருக்கிரு.ர்.