பக்கம்:கவிகளின் காட்சி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இறையனர் அகப்பொருள் 47 வனப் அமர்த்து பலவகையிலும் இம் மொழியைப் பேணி வருகிருன். அரிய ஒரு நூலும் செய்து தன் பெயரால் அதனை வெளியிட்டுப் பெரிய கவியாப் விளங்கினன். மறைமுதல் கிளங்க வாயால் மதிமுகிழ் முடித்த வேனி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை அனேத்தும்வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உள்கினேந்து ஏத்தல் செய்வாம். (சீகாளத்திப் புராணம்) கம் பெயரை காட்டி இறைவர் ஒரு இலக்கண நூல் செய்து தமிழ் மொழியையும் தம் பேரையும் சீரோடு துலக்கி யிருக்கும் நிலையை இது நேரே விளக்கி யிருக்கிறது. கடவுள் பாடிய நூல் எந்த மொழியிலும் இல்லை; அந்த மகிமையைச் செங்கமிழ் ஒன்றே அடைந்துள்ளது. ஆகவே தெய்வத் தமிழ் என்னும் திவ்விய மேன்மையை எ ப் தி கிற்கின்றது. அரியகிலேமை பெரியதலைமையாய் மிளிர்கிறது. தமிழ்த் தெய்வத்தை ஏத்துவாம் என்று இந்தக் கவிஞர் போற்றியிருப்பது கடவுள் வாழ்த்த வகையோடு தொடர்பு கொண்டுமொழியின் ஏற்றத்தைத்தெளிவா விளக்கியுள்ளது. கற்ற கல்ை ஆய பயன் எல்லாம் கடவுளை உரிமையோடு கருதி வருவதே யாம்: வாலறிவனே மருவி வரும் அளவே நூலறிவு சால்புறுகிறது. மருவாவிடின் விருதா வாகிறது. கண் ஒளி யுடையது ஆயினும் கதிர் ஒளி இலையேல் அது யாதும் காணுமல் இளிவடையும்; அதுபோல் உயிர் உணர்வுடையது ஆயினும் உயர் பரமன் அருள் ஒளி இல்லை யேல் இது மருளாய் மயங்கி இருள்வாப் இழிவுறும். கண்ணுக்குக் கதிர் ஒளிபோல் உயிர்க்குப் பரமன் ஒளி