பக்கம்:கவிகளின் காட்சி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இறையனர் அகப்பொருள் 49 மேல் நாடுகள் கவிஞர்களை எவ்வாறு மதித்து வணங்கி வருகின்றன என்பதை இகளுல் உணர்ந்து கொள்கிருேம். கவி என்று சிவபெருமானுக்கு ஒரு பெயர். உயர்ந்த கவிகள் தெய்வத் திருவருள் மருவியுள்ளமை யால் அவை மெய்யான பலன்களை அருளி வருகின்றன. மாசில் பனுவற் புலவர் புகழ் புல நாவில் புனேந்த நன்கவிதை மாருமை மேவிப் பக்து விாைந்து வினேகந்தக் தாயிற்றே தண்ணம் புனல். (பரிபாடல் 6) மாசற்ற கவிஞருடைய காவிலிருந்து வருகிற கவிதை போல மாருத இனிமையோடு நீர் பரந்து பாய்ந்து உழவு முதலிய தொழில்களை வளமுறச் செய்தது என இது குறித் திருக்கிறது. நன்கவிதை என்றது. கலம் தெரிய கின்றது. சங்கத் தமிழ்க் கவிகள் வாழுகின்ற மதுரை அருகே மதுரமாய் ஒடுகின்ற ஆறு ஆதலால் கவிதையை அதற்கு உவமை ஆக ஆசிரியர் நல்லந்துவனர் இங்கனம் கூறியருளி ஞர். வையை நீர் செய்யுள் கீர்மை போல் சீர்மையது. பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே! (தாயுமானவர்) பாடுகின்ற கவிஞர் தேடுகின்ற செல்வம் எனச் சிவ பெருமான இவ்வாறு காயுமானவர் பாடியுள்ளார். அன் பர்கள் பாடுகிற பாடல்களைக் கேட்டு இன்பம் மிக அடை வது இறைவன் பண்பாப் என்றும் மருவி வருகின்றது. வேத மந்திரங்களைக் கொண்டு தன்னைப் பூசிப்பதினும் செந்தமிழ்க் கவிகளை வாசிப்பதே தனக்குப் பேரானந்தம், என்.று பலமுறையும் சிவபெருமான் பேசி யிருக்கிரு.ர். 4