பக்கம்:கவிகளின் காட்சி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது அதிகாரம். தருமிக்கு அருளியது. தரும தேவதையும் தமிழில் தனியுரிமை கொண்டாடி யுளது. இறைவனுடைய தொடர்பு கோப்க்கமையால் தமிழ் மொழி மறுபுலங்களிலும் புகழ் ஒளி விசியது. தேச மன்ன ரும் ஈசன் அருளை கினைந்த நாட்டு மொழியை நன்கு பேணி வந்தனர். வேந்தர் வழியே மாக்கரும் விழைக்க கின்றனர். வங்கிய சூடாமணி என்னும் பாண்டிய மன்னன் வான் முறையே வந்த செங்கோல் தாங்கினன். இவன் சிறந்த திேமான்; கிறைந்த மதிமான்; உயர்ந்த கலைஞன், இவனு டைய அருமை மனைவி பெயர் பதுமவதி; அதிசய அழகி. அந்தக் கோமகளோடு அமர்ந்த அரிய போகங்களே நுகர்க்க இக் கோமகன் அரசபுரிந்து வந்தான். அவ்வாறு வருங்கால் இளவேனில் பருவம்வந்தது. பங்குனி சிக்கிரை மாதங்களில் நகர் அயலே குளிர் பூம் பொழிலில் அமைந்திருந்த வசக்த மாளிகையில் வாசம் செய்வது வழக்கம் ஆதலால் அந்த முறைப்படியே கனக பரிவாங்களோடு மன்னன் அங்கே போய்த் தங்கியிருந்தான். இனிய மனைவியோடு மருவிக் கச் தருவ சுகங்களைச்சுகித்துக் களித்துத் திளைத்து வந்தான். ஒரு நாள் காமரைப்பொப்கை அருகே செய்குன்றில் தேவியுடன் அமர்ந்திருக்கும் பொழுத ոհւ, பரிமளம் கென்றலோடு சேர்ந்து விசியது. அந்த வாசனை விசவே மன்னன் வியக் தான்; இந்த அதிசய நறுமணம் எங்கிருந்த வருகிறது? என்று அயல் எங்கும் நோக்கினன்; சண்பகம் மகிழம் சக்கனம் முக விய மரங்களிலிருந்த வீசுகிறதோ என முதலில் திகைத்தான்; பின்பு தனது மனைவியின் கூந்தலில் இருந்தே அவ் வாசனை விசுவதை உணர்ந்து வியந்தான்; மலர் முதலியன யாகம்