பக்கம்:கவிகளின் காட்சி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தருமிக்கு அருளியது 57 சூடாமல் இயல்பாயிருக்க அந்தக் கோகையில் கின்று அத் தகைய மணம் விளைந்து வருவதை நினைந்து சிந்தனை செப் தான்: செயற்கையால் அன்றிப் பெண்கள் கூந்தலுக்கு இயற்கையான நறுமணம் உண்டா? என்று ஐயம் மீக் கொண்டு ஆராய்ந்தான். மனைவியின் மயிர் வாசனையில் மன்னன் உயிர் ஊசலாடியது. வாசக் குழலியோடு நேச மாப் இன்புற்றிருந்தவன் வேனில் பருவம் கழியவே நகர்க்கு வந்தான். கன் உள்ளத்தில் தோன்றிய ஐயத்தை பாரிடமும் நேரே கூறி உசாவவில்லை; சிங்கையில் எழுந்த அந்தச் சங் தேகத்தைக் கெளியச் செப்பவர்க்கு ஆயிரம் பொன் கருவ தாக முன் அறிவித்து அப் பொன் முடிப்பைச் சங்க மண்ட பத்தின் நடுவே கொங்க விட்டான். சங்கப் புலவர் எல்லா ரும் ஆலோசித்து பாதும் தெரியாமல் மறுகினர்; மன்னன் கருதியுள்ள கருத்து என்னதோ? யாதோ? என இன்ன வாறு எண்ணி எண்ணி இனைந்தாரே அன்றி யாதொரு விடையும் யாரும் கூற முடியவில்லை. அரசனுடைய மானச மருமம் சிறிதும் தெரியவில்லையே! என்று புலவர்கள் எல் லாரும் பரிவு கூர்ந்து படருழந்திருந்தார். திங்கள் இரண்டு கழிந்தும் ஆயிரம் பொன் தங்க முடிப்பு சங்க மாளிகையில் தங்கியேகொங்கியது. எங்கும்ஆலோசனை கள் ஏங்கிகின்றன. த ரு மி . தருமி என்னும் வாலிபன் ஒரு நாள் அங்கே வந்தான். அந்தப் பொன் முடிப்பைக் கண்டான்; அதன் மேல் ஆசை கொண்டான்; அவன் ஆதி சைவர் மரபினன். சதாசிவ பட்டர் என்பவருடைய மகன்; மிகவும் எழை; காப் தக்தை யரை இளமையிலேயே இழந்து விட்டான்; இருபத்தேழு வயது முடிந்தும் அவனுக்கு மணம்முடியவில்லை; கோயிலில் பூசை செய்யும் அருச்சகருக்கு அவன் உதவி புரிந்து வக்