பக்கம்:கவிகளின் காட்சி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கவிகளின் காட்சி சவுந்தர பாண்டியன் எனத் தன் குலத்தில் மூதாதை யாப் முன்னே தோன்றியிருந்து அரசு புரிந்த பரமன் இடை இடையே நேரே தோன்றி அருள் புரிந்து வருவது அந்த மன்னன் மரபுக்கு அதிசய ஆனந்தமாய்ப் பெருகி வந்தது. 'பொன்னகர்க் கூடல் சென்னியம் பிறையோன் பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கடறிப் பொற்குவை தருமழிக்கு அற்புடன் உதவி என் உளம் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும் கள்ளவிழ் குழல்சேர் கருணேளம் பெருமான்.' (கல்லாடம்) இளமதியைக் கலையில் சூடிய பெருமான், வழுதி மதி யில் மருவியிருந்த மருமத்தை விழுமிய ஒரு கவியில் விளக்கி முழுமதிக் கவிஞனப் நேரே தோன்றிச் சங்கப் புலவர் களுக்குக் காட்சி தக்க, தருமிக்குக் தங்கத் திரளையை அருளி யுள்ள அருள் நிலையைக் கல்லாடர் இவ்வாறு தம்முடைய கவியில் சுவையாப் பொதிந்து உலகம் உவந்து காணக் காட்டியிருக்கிருர். இக்கக் காட்சியில் உள்ள மாட்சியைக் கருத்து ஊன்றி ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். சொல்லாடும் திறத்தில் கல்லாடர் வல்லவர் என்பதை அவருடைய உரைகள் தெளிவா உணர்த்தி வருகின்றன. பொதியமலைத் தலைவன் எனப் பாண்டிய மன்னனை ஈண்டுக் குறித்தது, தென்றல் அன்று தந்த நறுமணத்தால் இந்தப் பெரு மணங்கள் எல்லாம் விளைந்து வந்துள்ள உண் i Ho Ho ... so மையை உரிமையோடு துண்மையா உணர்ந்து கொள்ள். குறிப்பு மொழிகள் கூர்ந்து சிந்திக்கத்தக்கன. இறைவன் ஒரு க. வி ளு குப் அன்று எழுந்தருளிய