பக்கம்:கவிகளின் காட்சி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தருமிக்கு அருளியது 67 கோலத்தைக் கவியுலகம் என்றும் பெருமையாக் கண்டு களித்த உவகை மீதார்த்து உரிமை கூர்ந்து வருகிறது. கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி வயிரம் வேய்ந்த குண்டலம் குடிகொண்டு ஆகத்து அழகு எலாம் கொள்ளைகொள்ளத் தண்டமிழ் மூன்றும் வல்லோன் தான எனக் குறியிட்டு ஆங்கே புண்டர அதுதலில் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள. (1) விரிகதிர்ப் படாத்தில் போர்த்த மெய்ப்பையுள் அடங்கிப் பக்கத்து எரிமணரிக் கடகத் திண்டோள் இளேயவர் அடைப்பையோடும் குருமணிக் களாஞ்சி அம்பொற் கோடிகங் தாங்க முத்தால் புரிமதிக் குடைக்கீழ்ப் பொற்கால் கவரிபால் புரண்டு துள்ள. (2) சொல்வரம்பு இகந்த பாதம் என்பது தோன்ற வேதம் நல்லபா துகையாய்ச் சூட, கவின்றன. கற்றுப் பாட, வல்லவர் மறையின் ஆறு மனுமுதல் கலைபோல் பின்பு செல்ல நூல் ஆய்ந்தோர் வைகும் திருந்தவைக்களத்தைச் சேர்ந்தான். (3) (பரஞ்சோதிமுனிவர்) இறைவன் கவிஞன் ஆப் வந்திருக்கும் காட்சியை ஆவிய உருவமா இவை வரைந்து காட்டியுள்ளன. செக்கிறத் திருமேனியின் தெய்வப் பொலிவும், அணி மணிகளின்