பக்கம்:கவிகளின் காட்சி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கவிகளின் காட்சி அலங்காரங்களும், பொன் ஆடைகளுடைய சாடைகளும், உளம் கனிந்து உரிமையோடு ஏவல் புரிகிற இளம் புலவர் களும், அரிய மரியாதைகள் மருவிய ஆரவாரங்களும், விர கம்பீரமான விழுமிய நடையும், வியத்தகு எழிலும் கருதிக் கானுக்தோறும் கழிபேருவகைகளை விளைத்த வருகின்றன. பாராலும் காணமுடியாத ஒருவன் எல்லாரும் கானும் படியாப் ஆலயத்திலிருந்து வெளியேறி மதுரை விதி வழியே கடந்து அதிசய கம்பீரமாச் சங்கத்தை அடைந்திருக்கிருன். இத்தகைய உத்தமக் கவிஞனை உரிமையாப் பெற்றி ருக்கும் தமிழ் மொழி எத்தகைய பெருமையுடையது? எத் தணை அருமை தோய்ந்தது? எவ்வளவு மகிமை வாய்ந்தது? அவ்வளவையும் மானச விழிகளால் கருதிக் காண்பவர் உள்ளம் உருகி உவகை சுரங்து உயர்வு மிகுந்து திகழ்வர். சிவபெருமான் கவிஞர் பெருமானப் வந்த இந்தச் சுவையான சரிதையைச் சங்க காலப் புலவர் முதல் பலரும் புகழ்ந்து மகிழ்ந்துள்ளனர். பல நூல்களும் வியந்து வரைக் தள்ளன. சில கவிகளை அயலே காண வருகிருேம். வெள்ளேத் தாமரைச் செல்விதன் பெண்மையை விடுத்திட்டு எள்ளற் பாடில்ஆண் உருஎடுத்து என முடி ஏந்தும் பிள்ளைப் பால்மதி யான்தமிழ் ஒருவனப் பெருஞ்சீர் வள்ளம் பாண்டியற்கு ஆருயிர்த் துணைவராய் வாழ்ந்தார். (1) இன்னவாறு அவர் வாழுநாள் ஒர்பகல் எரிகால்