பக்கம்:கவிகளின் காட்சி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கவிகளின் காட்சி, சாற்றிய செய்யுள் குற்றம் சடைகொண்டு வெருட்டல்வேண்டா தோற்றிலன் இதனுக்குஎன்ருன் தொலைவிலான் வெகுண்டு (சொல்வான். (18) எம்மொடு முரணிவான்தோய் இமயமால் வரைப்பூங்கொம்பின் மைம்மலி மறைசொல் ஆன மணம்கமழ் குழல்பழித்த செம்மைகொள் அறிவிலாய் தீர்ப்பருங் குட்ட நோய்கொண்டு இம்மையில் அலேக என்ருன் இறப்பகக் கீரன் அஞ்சி. *(14) முழுமெய்யும் பனித்து இரங்கி முருகலர் கமலம் வென்ற கழலடி வீழ்ங்கி றைஞ்சிக் கருணையங் கடலே! எங்காய்! இழிபுடை நாயின் அன்னேன் இலங்கறி விலாதுசெய்த பிழைபொறுத்துஅருளிச் சாபப்பிணிகெட அருள்வாய்என்ருன். என்றலும் கருனே வள்ளல் எரிசினம் தனிந்து ரே சென்று கயிலே கானின் திருமிக் கொடுகோய் என்று குன்றுறழ் புரிசை விண்தோய் கோயிலில் புகுந்து ஒளித்தான்; தென்றலம் பொதிய வெற்பின் தென்னர்கோன் அதிசயித்தான். (சிகாளத்திப் புராணம்) தருமிக்கு அருள்புரிந்து ஒரு கவி வரைந்த தக்து கவிஞ குய் வந்து இறைவன் செய்த திருவிளையாடல்களை இக் கவி கள் சுவையா விளக்கியுள்ளன. பாடல்களை ஊன்றிப் பார்த் தால் நிகழ்ச்சிகளை நேரே தெளிவாய்த் தெரிக் து கொள்ள லாம். வாலறிவன் நூலறிவனப் ஞாலமறிய வந்துள்ளான். வங்கிய சூடாமணிப் பாண்டிய மன்னனும், கருமிப் பட்டனும், இறையனரும், நக்கீரனரும் இக்கக் காட்சிக்கு மாட்சியான பாத்திரங்களாய் மருவி ஆட்சி புரிந்துள்ளனர். அரசியின் கூந்தல் வாசனையால் இவ்வளவு அதிசயங் கள் விளைந்திருக்கின்றன. மன்னன் எண்ணிய ஒர் எண்ணம் கண்ணுகல் கடவுளைக் கவிஞன் ஆக்கி, உலகிற்கு அரிய ஒரு கவியை உதவித், தருமிக்குப் பெரிய கிதியைத் தக்க, தமிழ்