பக்கம்:கவிகளின் காட்சி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பாணருக்கு உதவியது 75 இதில் ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன்; இதனைக் கொண்டு போய்ச் சேரமன்னனிடம் கொடு, அவன் உனக்கு எல். லாம் கொடுப்பான்; குறித்துள்ள மேல் விலாசத்தின் படி யே காலையில் எழுந்துபோ’ என்று சொல்லி விட்டு விரைந்து மறைந்த போனர். பாணர் பயந்து விழித்தார்; பக்கத்தில் ஒரு ஒலைச் சுருள் கிடந்தது; வியந்து எடுத்தார்; தன் பால் பரமன் கொண்டுள்ள கருணையை நினைந்து கெஞ்சம் உருகி. அழுதார். சூரியன் உதயமாகவே அந்த முடங்கலை ஒரு அாய' வெள்ளைத் துணியில் பொதிந்து எடுத்துக் கொண்டு ஆலயத் தை வலம் வந்த தொழுது விட்டுக் காரியம் கருதிப் போ ஞர். அந்தச் சீட்டில் தீட்டியுள்ள பாட்டு அயலே வருகிறது. திருமுகம். மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால்கிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்: 5 பருவக் கொண்மூப் படிஎனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சோலன் காண்க! பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் 10 தன்போல் என்பால் அன்பன்; தன் பால் காண்பது கருதிப் போங்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. (ஆலவாய்ச்சிவன்) திருவஞ்சைக்களத்தில் இருந்த அரசு புரிந்த சேரமன்ன லுக்குச் சொக்கப் பெருமான் இப்பாசுரத்தை இவ்வாறு எழுதியிருக்கிரு.ர். அவ்வேந்தன் சாங்கசீலன்; சிறந்த சிவ பத்தன்; நாளும் மதுரையைத் திசைநோக்கி உழுவலன்