பக்கம்:கவிகளின் காட்சி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவிகளின் காட்சி போடு தொழுத பின்பே உணவு கொள்வான்; கருமமும் நீதியும் கண்ணளியும் உடைய அப்புண்ணிய வேந்தனுக்கு இப்புனித நாதன் இதனை இவ்வண்ணம் எழுதியருளினர். இது பதினேராங் திரு முறையில் முதலில் சேர்க்கப் பட்டுள்ளது. திருவாலவா யுடையார் அருளிச் செய்த திரு முகப் பாசுரம் என உலகம் ஒரு முகமாய் இதனை உவந்து புகழ்ந்துவருகிறது.சிவபெருமான் கவிசுவைபெருகிகின்றது. சீட்டுக்கவி என்று ஒருவகைப் பாட்டு செய்யுள் முறை யில் உண்டு; அதற்கு இது மூல முதல். ஒலேச் சீட்டிலேயே தம் கருத்தைக் கவிஞர் காட்டி விடுவதால் சீட்டுக்கவி என நேர்ந்தது. நமது கவிஞர் பெருமான் முதலில் இதனை இப்ப டிக் காட்டியிருக்கிரு.ர். தமது பெருமிக கிலையை முன்ன தாக விளக்கி விட்டு அதன்பின் இன்னவாறு செய்ய வேண் டும் என்று மன்னனுக்குக் கட்டளை யிட்டுள்ளார். கவியின் பொருள் கிலையைக் கருதி உணர்ந்து கொள்ள வேண்டும். கிருபனது கிருபத்தின் நிலை. "உயர்ந்த மதில்கள் புடைசூழ்ந்த சிறந்த மாடமாளி கைகள் கிறைந்த மகரையம் பதியிலே மன்னியுள்ள சிவ பெருமான் ஆன நான் சேரர் பெருமான் ஆன உனக்கு உரிமையோடு மொழிகின்றேன்: நீ பெரிய கொடையாளி: கார்கால மேகம் போல் கவிஞர்களுக்குப் பொன்மாரி பொழிபவன்; உள்ளம் உவந்து அவ்வாறு உதவுகின்ற வள்ளன்மையால் உனது புகழ் திசைகள் தோறும் ஒளி களை வீசி வருகிறது; கொடையோடு போர் வீரமும் உடைய சீரிய அரசே! ஒரு காரியம் கருதி எழுதியுள்ள எனது திருமுகத்தை நீ கருதிக் காண வேண்டும்; இனிய யாழை இனிது பயில்கின்றவன்; இசையில் வல்லவன்: