பக்கம்:கவிகளின் காட்சி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இடைக்காட ர்க்கு இசைந்தது 9 L. புலவரை மதியாதவன் புலமையை இகழ்ந்தான்; அதனை இகழ்ந்தவன் மொழியை இழிவு செய்தான்; அக்க இழி வால் சொல்லையும் பொருளையும் எள்ளி கின்ருன்; அங்கிலை சத்தியையும் சிவனையும் அவமா இளிவு செய்த பழியாயது. இந்தக் கொடிய பழியை வேந்தன் வினே செய்து விட்டான் எனப் புலவர் ஈண்டு உலக விழிதெளிய உணர்த்தி யருளினர். வாகமுறை போத நிறையாப் மேவியுள்ளது. ரகுவம்சம் என்னும் அரிய காவியத்தை வடமொழியில் இயற்றியுள்ள காளிதாசர் முதலில் கடவுளை வணங்கி நூலைத் தொடங்கியிருக்கிரு.ர். அவர் தொழுது கதித் தள்ள வகை யை அயலே வருகிற சுலோகத்தால் அறிய வருகிருேம். வாகர்த்தாவிவ வலம்பிருக்தெள வாகர்த்தப்ரதி பத்தயே ஜகத: பிதரெள வந்தே பார்வதி பரமேச்வரெள. (ாகுவம்சம், 1) சொல்லும் பொருளும் போல் நன்ருப் ஒன்று சேர்க் திருப்பவரும், உலகத்திற்குக் காயும் தங்கையுமாயுள்ளவரும் ஆகிய பார்வதி பரமேசுவரரை மொழி அறிவும் பொருள் உணர்வும் எனக்குத் தெளிவாக உண்டாகும் பொருட்டு நான் வணங்குகிறேன் என இவ்வாறு அக் கவிஞர் ஈசனைத் துதி செய்து பின்பு காவியத்தை ஆரம்பித்திருக்கிரு.ர். இந்த மங்கள சுலோகத்தை மகிழ்ந்து வியந்து ரைடர் என்னும் அறிஞர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிரு.ர். God Siva and his mountain bride, Like word and meaning unified, The world's great parents, I beseech To join fit meaning to my speech. (A. W. Ryder)