பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கவிக்குயில் சரோஜினியின்



2. பாரதி கண்ட புதுமைப்பெண் பிறந்தார்!

தொட்டிலை ஆட்டும் கை; தொல்லுலகை ஆளும் கை என்று பாரதியார், புதுமைப் பெண்ணை வாழ்த்தி வரவேற்றார்! அதற்கேற்ப, கவிக்குயில் சரோஜினி தேவி கி.பி. 1879ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் நாள் வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிராமணர் அகோரநாத் சட்டோபாத்தியாயர் என்ற அறிஞருக்குப் பெண்ணாக ஐதராபாத் நகரில் பிறந்தார்.

அகோரநாத் வேதம் ஓதி இறைவனை வழிபடும் குலத்தில் தோன்றியவர்! "சட்டோபாத்தியாய" என்பது அவரது குடும்பப் பட்டப் பெயர். இவரது மரபுப்படி வேதமும், மற்ற கலைகளையும் ஒழுக்கத்துடனும், ஆசாரத்துடனும் கற்று நடந்து வந்தார்.

ஆங்கிலக் கல்விக்கு அப்போதிருந்த உயர்வையும், மதிப்பையும், மரியாதையையும் கண்டு ஆங்கிலம் படித்து வல்லுநரானார். இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார்; படித்தார்; அங்கு சிறப்பானக் கல்வியாளராய் விளங்கியதால் "டாக்டர்" பட்டமும் பெற்றார்.

இந்தியா திரும்பி வந்த அகோரிநாத், வங்காளத்தை விட்டு ஐதராபாத் நகருக்கு குடும்பத்தோடு வந்து குடியேறினார் அங்கே ஓர் பணியில் சேர்ந்தார். அந்தப் பணிக்கும் அவருக்கும் பொருந்தி வரவில்லை. அதனால், ஐதராபாத் நகரிலே ஒரு கல்விக் கோட்டத்தை நிறுவி, அவரே அக்கல்விச் சாலையில் ஆசிரியராகவும் பணியாற்றி, தனது கல்விச் சாலையை உயர்த்தினார்.

ஆசிரியரான அகோர நாத்துக்கு ஏழு குழந்தைகள் ஐதராபாத் நகரிலே பிறந்தன. அக்குழந்தைகளுள்