பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

13



3. ஞானக் கிறுக்கே கவிதைச் சிறப்பு!

மகள் சரோஜினி மெட்ரிலேஷன் கல்வித் துறையிலே முதல் மாணவியாக வெற்றி பெற்றது அகோர நாதருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதனால் தனது செல்வி மேலும் கல்வியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஊக்கம் அவருக்கு ஏற்பட்டது.

அறிவியல் துறையில் உலகம் முன்னேறி வருவதைக் கண்ட அவர், தனது மகளும் அறிவியற் செல்வியாக வளர வேண்டும் என்றும் விரும்பினார். இலண்டன் மாநகரத்திலே உள்ள மன்னார் கல்லூரியில் தனது புதல்வியைச் சேர்த்தார்.

தந்தை ஆசையை அறிந்த சரோஜினி, அவர் விருப்பத்தை நிறைவேற்றிட இலண்டன் சென்று அறிவியல் பாடங்களை ஆரம்பத்தில் மிகவும் அக்கறையுடன் படித்தார். அத்துடன் பீஜ கணிதமும், விஞ்ஞானப் புதுமைகளையும் நாளுக்குநான் விரும்பிக் கற்க முனைந்தார்!

சிறுமியாக இருக்கும்போதே கவிதை புனையும் ஞானச் செருக்கோடு வளர்ந்த சரோஜினியின் மனம், லண்டனிலேயும் கவிதைக் கிறுக்கை விடவில்லை. உள்ளத்திலே ஒளி தோன்றிவிட்டால், வாக்கிலும், செயலிலும் ஒளி வெளிச்சமிடும் என்பது உண்மைதானே!

ஒருநாள் வகுப்பிலே பீஜகணிதம் ஒன்றைக் கொடுத்து அதற்கு விடை எழுத வேண்டும் என்றார் ஆசிரியர். பீஜ கணக்கு என்றதும் பாரதியாரைப் போல சரோஜினிக்கும் கணக்கு பிணக்கை உருவாக்கி விட்டது!

நோட்டுப் புத்தகத்திலே ஏதேதோ கோடுகளைப் போட்டுப் போட்டுக் கிறுக்கிப் பார்த்தார். விடை வர-