பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கவிக்குயில் சரோஜினியின்

வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வண்டுகள் நேற்று காணப்படவில்லையே; ஏன் இன்று போட்டியிட்டு அவை உங்களையே சுற்றிச் சுற்றி வருகின்றன? உங்களுடைய நாற்றமோ! தேனோ! மகரந்த பண்போ! அந்த வண்டுகளின் இசையிலே என் மனம் மயங்குகின்றபோது, நீங்கள் தேனைப் பறிகொடுத்து மயக்கமடைகின்றீர்கள்? விடுத்திக்குள்ளே இருக்கும் என்னையே மணம் வீசி இன்புறுத்துகிறீர்களே! நியாயமா மலர்காள்!

பூக்களை சுற்றி சுற்றி வலம் வரும் சிட்டுக்குருவிகளே! என்னையும் உங்களுடன் ஏந்திச் செல்லக்கூடாதா! ரோசா வண்ண இதழ்களால் எனது உடலையே மூடி மறைத்துக் கொள்ளக்கூடாதா? அந்த மலர்களின் தேனிலே என்னை மூச்சு திணற விடக் கூடாதா? செந்திற வண்ண ரோஜா மலர்களே, உங்களுடைய இதழ்களால் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டால் என்ன? நிறமா உங்களுக்குக் கெட்டு விடும்? என் நிறம், உங்களது நிழல்களால் என்ன நிறமா உங்களுக்குக் கெட்டு விடும்? என்நிறம், உங்களது நிழல்களால் வண்ணம் பெறலாமே? ஏன் என்னை அணைய மறுக்கிறீர்கள்? என்றெல்லாம் பூக்களைப் பார்த்துத் தனக்குதானே பேசுவார்.

இலண்டனில் படித்துக் கொண்டிருந்த குமாரி சரோஜினி, கணிதத்தை மறந்தார்! விஞ்ஞானத்தை இகழ்ந்தார்! இயற்கை உணர்ச்சிகளிலே மிதந்தார்! சிந்தனை வான்வெளியிலே பறந்தார்! கவிதையெனும் சிறகடித்தார்! கவிஞரெனும் காற்றோடு கலந்து மக்களது உணர்வுப் பூந்தோட்டங்களிலே மணம் வீசிக் கொண்டே பவனி வந்தார்!

இவ்வளவு ஆற்றல்கள் இருந்தாலும், கவிதை எழுதும் இலக்கணங்கள் தெரியுமா?-தெரியாது சரி, இலக்கணம் படித்தவர்கள் எல்லாருக்குமே கவிதை எழுதும் ஆற்றல்