பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

19

கோபிகா ஸ்திரிகள், காட்சியின் சாந்தி; இதற்கும் மேலாக இறைவனை வழிபாடியற்றும் அமைதியான இயற்கைச் சூழல்கள் மட்டுமே தேவை எனக்கு!" என்று பேசிக் கொள்வார்.

கல்லூரி படிப்பு தேவையா இந்த இளம் கவிக்கு? கற்றாலும் ஏறுமா கவனத்துக்கு? என்ற நிலையில் சரோஜினியின் கல்வி ஒழுக்கம் சீர்குலைந்து வந்தது என் செய்வாள் குமாரி இயற்கை அல்லவா அவளது இளமையை; மூளையை; சிந்தனையை; களவாடிவிட்டது! எனவே கல்வியில் ஊமையானாள்!

கணிதம் போச்சு கற்பனைக் கவி வந்தது டும்டும்; அறிவியல் போச்சு மேடை பேச்சு ஆற்றல் பலம் வந்தது டும்டும் என்று பாலர் பாடிடும் பாடல் பொருள் போல அந்தக் குமாரியின் சிந்தனை வளையங்கள் வளைந்தன! நெளிந்தன! முறுக்கேறின! ஆனால் முறிவு மட்டும் பெறவில்லை; காரணம் தனது தந்தையின் அன்பு!

இலண்டன் மாநகரத்துப் பேச்சு மண்டபங்களில் எல்லாம்-சரோஜினி குரலோசையின் நாதம்; அதுவும், ஆங்கில மொழியின் நயமான பெண்குரலின் நாதம்; ஆயிரக்கணக்காகத் திரண்ட மக்கட் கூட்டம் இவ்வளவு அற்புதங்களோடும் லண்டன் மாநகர் மண்டபங்கள் இன்னோசைகளோடு காட்சி தந்தன!

கவிதையாற்றல் எவ்வாறு கரும்புச் சாறென சுவை தந்ததோ, அதே ருசி, பேச்சு மேடைகளிலும் சரோஜினிக்குப் பேராதரவைத்திரட்டித் தந்தன.

இளம் ஆங்கிலக் கவியின் பேச்சு கவிஞர் பெருமக்களையும், இலக்கிய வித்தகர்களையும் ஈர்த்தது! இளம் ஆங்கிலப் புலவரின் மேடைப்பேச்சுக்களைக் கேட்டவர்கள்; ஆஹாஹா என்று வாய் திறந்தார்கள்!