பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கவிக்குயில் சரோஜினியின்

இருந்தாலும் பரவாயில்லை; இளம் கவி நெஞ்சம் கொண்ட துடிப்பான குமாரியாகத் திரும்பி வந்து சேர்ந்த மகளை அன்புடன் வரவேற்றுத் தாயும் தந்தையும்வாழ்த்தி மகிழ்ச்சிப் பெற்றனர்.

பெற்றோர் முகம் பார்த்தவுடன் சரோஜினிக்கு நோயெல்லாம் எங்கே பறந்ததோ தெரியவில்லை. அகோர்நாதர் குடும்பமே புது மகிழ்ச்சிப் பூத்தத் குடும்பமாகத் காட்சி தந்தது. ஒருவரை ஒருவர் அன்புடன் அளவளாவி ஆனந்தமடைந்தார்கள்.

தாய் மண்ணை மிதித்ததும், அவர் தக்க மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதால், சரோஜினிதேவி முன்பு போல் வாலைக் குமரியாகக் காட்சி தந்தார்! வயது பத்தொன்பதுதான் என்றாலும் அழகு தவழும் சிலையாகவே விளங்கினார்.

வளமையானது இளமை; பசுமையான கனவுகள் மனதில் மலர்ந்தன! எப்போதும் கற்பனையான சொற்களின் ஆரவாரமே எதிரொலித்தன; கவிதைப் பூக்கள் நாள்தோறும் சரோஜினிதேவி என்ற பூந்தோட்டத்தில் பூத்துப் பொலிந்தன!

ஐதராபாத் நகரில் மருத்துவத்துறையில் புகழ்பெற்று விளங்கியவர் பா. கோவிந்தராஜுலு இவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்; தந்தை பெயர் பாஷியக்காரலு நாயுடு; தாயார் பெயர் முனியம்மாள்; கோவிந்தராஜூலு நாயுடுவும், சரோஜின் தேவியும் நெருங்கியவர்களாகப் பழகினார்கள்.

கோவிந்தராஜுலு இராணுவப் படையில் சுபேதார் மேஜராகப் பணிபுரிந்த ஓர் இராணுவ வீரர். உயர்ந்த பண்புகள் கொண்டவர்; நாயுடு குணங்கள் சரோஜினி தேவிக்குப்பிடித்திருந்தன. இருவருக்கும் இடையே அன்பு இணைந்தது; அது இல்லறத் தம்பதிகளாக மாறிடும் காதல் வலிமை கொண்டதானது. குறிப்பாக சரோஜினி