பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கவிக்குயில் சரோஜினியின்

கும் துணிவு கொண்ட அரிய பண்பாளர் நாயுடு யாருக்கும் எதற்கும் அஞ்சாத கடமையாளர்!

இத்தகைய ஒரு பண்பாளரை சரோனனி திருமணம் செய்துகொள்ள விரும்பினார். தந்தை அகோரநாத் அவர்களுக்கும் தெரிவித்து அனுமதி கேட்டார்

சரோஜினிதேவி திருமணத்தை நெருங்கிய உறவும், சீர்திருத்த நெஞ்சங்களும் பாராட்டிப் போற்றின; வழக்கம் போல பிரமாணம் தனது சாதிமுறை வருணாசிரமக் கணைகளை விடுத்தது! ஆனால், தம்பதிகள் இருவருமே எதற்கும் அஞ்சவில்லை!

அகோரநாதரும், மகளை விடப் பெரியது ஒன்றுமிலை என்ற முடிவை மேற்கொண்டார்! திருமணத்திற்குச் சம்மதித்தார்! வாதப் பிரதிவாதங்கள் நெருப்புப்போல எதிர்த்துக் கிளம்பின.

இருப்பினும், பிராமணப் பெண் நான் அவரை விரும்புகிறேன். நாயுடு வகுப்பினரான அவர் என்னை விரும்புகிறார்! இடையே உங்களுடைய அனுமதி எமக்குத் தேவையில்லை; எவர் தடுத்தாலும் விடேன்; மணப்பேன்; என்று சரோஜினி வீர தீர திருமண முரசு கொட்டினார்!

கோவிந்தராஜுலு பிரம்மசமாஜத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்; பொருளற்ற சடங்குகளை எதிர்த்தவர்; அதனால் பிரம்மசமாஜத்து முறைப்படியே தம்பதிகள் இருவருடைய திருமணமும் நடந்தேறியது.

கவிக்குயில் சரோஜினி நாயுடு திருமணம், கலப்புத் திருமணமாக நடந்து முடிந்தது; சீர்திருத்தவாதிகள் போற்றினார்கள்; பழமை விரும்பியான வருணாசிரம அடிமைகள் மற்றும் சிலர் தூற்றினார்கள். இல் வாழ்க்கையை கோவிந்தராஜுலு-சரோஜினிதேவி இருவருமே இன்பமாகத் தொடர்ந்தார்கள்.