பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

25



5. நெஞ்சிலே தைத்த நெருஞ்சி முள்!

டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு டாக்டர் தொழிலில் புகழ் பெற்ற வருவாயாளர்! சரோஜினிதேவி, ஆங்கிலப் புலமை உடைய அருமையான பேச்சாளர்; இளம்பெண் கவிஞர்!

கல்வி அறிவு நன்கு பெற்ற இருவர்கள் இடையே பொருளாதார வலிமை இருந்தது; இத்தனைக்கும் மேலே இருவரிடமும் ஒத்த அன்பும்-பண்பும் இருந்தது;

டாக்டர் நாயுடு பிரம்மசமாஜ தொண்டர்; அவர் இல்லத்துக்குள் எப்போதும் விருந்தாளிகள் நடமாட்டம் இருந்தகொண்டே இருக்கும்! வம்பர்களோ, துன்பர்களோ, வஞ்சர்களோ, நஞ்சர்களோ எவருமே அங்கு வாரார்!

காரணம், பிரம்ம சமாஜத் தோழர்களுடன் அடிக்கடி சமுதாய சீர்திருத்தங்களைப் பற்றி, டாக்டர் கலந்துரையாடுவார்; திட்டம் தீட்டுவார்; படித்தவர்கள், படிக்காதவர்கள், படித்துப் பக்குவம் பெற்ற பண்பாளர்கள், அன்போடு எவரையும் அரவணைத்துப் போகும் அன்பாளர்கள், சமூகப் பிரச்னைகளை அகற்றிட கலந்துரையாடுவோர். உலக மாறுதல்களைப் பற்றி உணர்ந்து பேசுவோர், சமுதாயம் என்ற நெல்லுள்ளே அரிசியை மூடிக் கொண்டிருக்கும் உமி, தவிடு போன்ற மாசுகளை அகற்றிட என்ன வழி என்று ஆய்வோர் அனைவரும் கூடி நாயுடு வீட்டில் வாதிப்பார்கள்!

இந்த சமுதாயச் சீர்திருத்தப் பேச்சுக்களிலே கவியரசி சரோஜினி நாயுடுவும் கலந்துகொண்டு, இடையிடையே தக்க யோசனைகளைக் கூறுவார். அதனால், கவிக்குயில் சிந்தனையில் கவிதை உணர்ச்சி மட்டுமல்லாமல் சீர்-