பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

கவிக்குயில் சரோஜினியின்

கோகலே எத்தகைய பண்பாளர் தெரியுமா? ஒழுக்க சீலர்; பண்பட்ட கல்வியாளர்; மான்போன்ற சாதுவான மனித மேதை; ஆனால், அவருக்கும் மற்ற விடுதலை வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்; அவர் ஆங்கிலேயர்களைப் பகைவராகக் கருதவில்லை காரணம் அவர்களோடு அன்பாகப் பழகியே இந்திய மக்களுக்கு ஏதாவது நன்மைகளைச் செய்யலாமே என்ற பெருந்தன்மைப் படைத்த பெருந்தகை ஆவர்.

இதுபோன்ற அரிய பண்புகள் அவரிடம் இயற்கையாகவே இருந்ததனால், காந்தி பெருமான் கோகலேயை தனது அரசியல் ஆசானாக நம்பினார்; ஏற்றார்; அவர் வழியையே பின்பற்றினார்.

இதே நேரத்தில் பாகிஸ்தான் பிரிவினைதேவை என்று காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் பிற்காலத்தில் போராடிய முகமதலி ஜனாப்ஜின்னா, அப்போது காங்கிரஸ் கட்சியிலே தேசியவாதியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

சரோஜினி தேவிக்கு முகமதலி ஜின்னாவின் நட்பும் அப்போது கிடைத்தது. அவரோடும் தேவி நெருங்கிப் பழகினார். அரசியல் பற்றிய விளக்கம் கேட்டறிந்தார்.

இந்திய சுதந்திரத்திற்காக மேற்கண்டவாறு போராடிய தேச பக்தர்களின் தொடர்பு; கவிக்குயிலுக்கும் நெருக்கமாக, இறுக்கமாக ஏற்பட்டதால், அவருக்கும் சுயராச்சியப் போரின் முக்கியத்துவம் புரிந்தது.

இந்த நேரத்தில்தான் இங்கிலாந்து நாட்டிலே இருந்து இந்திய வந்த தியாசாபிகல் சொசைட்டியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான அன்னிபெசண்ட் அம்மையாரின் தொடர்பும் சரோஜினிக்கு ஏற்பட்டது.

அன்னிபெசண்ட் அயல்நாட்டு வீரமங்கைதான் என்றாலும், அவர் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற