பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கவிக்குயில் சரோஜினியின்

சுட்டதோடு மட்டுமா அந்த அரக்கன் நின்றான்? கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களை அவமானப்படுத்தினான்! பெண்களைக் கேவலமாக நடத்தினான்! ராணுவ வீரர்கள் செய்த கொடுங்கோன்மைகளை வரவேற்று வாழ்த்தி ஊமைபோல வேடிக்கைப் பார்த்த வெறியனானான் டயர்!

பஞ்சாப் படுகொலை நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்ட உலகநாடுகள் அதிர்ச்சி அடைந்தன! இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் கொந்தளித்து வீறு கொண்டது!

உலக நாடுகளை எல்லாம் பதைபதைக்க வைத்த இந்த பஞ்சாப் படுகொலையை விசாரணை நடத்திட பிரிட்டிஷ் அரசு ‘ஹன்டர் கமிட்டி’ என்ற ஒரு குழுவை அமைத்தது.

இந்தக் குழு ஒரு கண் துடைப்பு; இதனால் உண்மை வெளிவராது; பிரிட்டிஷ் கொடுமைகளை மூடி மறைக்கவே இந்தக் குழுவை அந்த அரசு அமைத்துள்ளது என்று இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கிளர்ந்தெழுத்து கண்டனம் செய்தது.

எனவே, அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, ஜாலியன் வாலாபாத் தில் நடந்தது என்ன? என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திட பண்டித மோதிலால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோரைக் கோண்ட வேறொரு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது.

'பிரீட்டிஷ் அரசும், ராணுவமும் எவ்விதத் தவறும் செய்யவில்லை; இந்தியப் போலீசார்தான் அக்கிரமமான அராஜகங்களைச் செய்து விட்டார்கள்! என்று ஹன்டர் கமிட்டி தனது விசாரணையில் தெரிவித்தது.

காங்கிரஸ் மகாசபை விசாரணைக்குழு ஜாலியன் வாலாபாத் என்ற ஊருக்கே சென்று, அங்குள்ள ஊர்