பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கவிக்குயில் சரோஜினியின்

தலைவர்களிடம் நல்ல செல்வாக்கு இருந்தது இந்த நேரத்தில் மாண்டேகு சரோஜினிதேவி பேச்சின் மீது ஓர் அறை கூவலை வேறு விட்டுவிட்டார் அல்லவா?

அதனால் பிரிட்டிஷ் பத்திரிகைகளும் அதன் எடுபிடி இந்திய ஏடுகளும், கவியரசி சரோஜினி தேவியைக் கேலியாகவும், கிண்டலாகவும் கண்டித்தும் எழுதின.

"இந்தியத் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி மீது இப்படித் தான் கண்டபடி புளுகுகிறார்கள் என்ற முடிவை உலகுக்கு உருவாக்கிவிட்டன பிரிட்டிஷ் சார்பு ஏடுகள்!

விடுவாரா சரோஜினிதேவியார்? இந்திய மந்திரி மாண்டேகு அறை கூவலைச் சவாலாக ஏற்றார். அவருக்கு உடனே விவரமாக மறுகடிதம் எழுதினார். என்ன விவரம் அது?

★ மாண்டேகு பெருந்தகையாளரே!

என் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவையா? பொய் என்றால் அதை நிரூபிக்க தாங்களும், பிரிட்டிஷ் அரசும், இந்திய அரசும் முன் வருமா என்று உம்மை நோக்கி அறை கூவுகின்றேன்! வருவீரா?

★ காங்கிரஸ் மகா சபையின் விசாரணைக்குழு அறிக்கையைக் கவனமாக நீர் படித்தீரா?

★ பஞ்சாப் மாநில ராணுவ ஆட்சியில் போலீசார் செய்த பயங்கர அட்டூழியங்கள் ஒன்றா? இரண்டா? பக்கம் பக்கமாக காங்கிரஸ் விசாரணைக்குழு அறிக்கை வெளிவிட்டிருக்கிறதே, அதைப் பார்த்தீரா?

★ ஒரு வேளை நீர் சூரியனையும் மறைக்கலாம்; பஞ்சாபில் என் சகோதரிகளுக்கு செய்யப்பட்டக் கொடுமைகளை நீரோ அல்லது உமது அரசோ, மறக்கவோ, மறைக்கவோ முடியாது.