பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

63

விளக்கி, மகான் காந்தியடிகள் வழியிலே இந்தியா பீடு தடை போட்டு வருவதையும் அழகாக எடுத்துரைத்து, அமெரிக்க மக்கள் இடையே புதியதோர் விழிப்பை உருவாக்கினார்.

கவிக்குயில் சரோஜினியின் காந்தியப் பிரச்சாரத்தால் இந்தியா மேலும் பெருமை பெற்றது மட்டுமன்று; பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரங்களையும் தனது பேச்சாற்றலால் முறியடித்தார்.


12. ஆப்ரிக்கப் பிரதமர் ஸ்மட்கடன் வாக்குப்போர்!

பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்காவில் அடிமரம் நுனிமரமாக வேட்டி வீழ்த்திய பின்னர், கவிக்குயில் சரோஜினி தேவி தென் ஆஃப்பிரிக்காவுக்கு காந்தியடிகள் கட்டளைக்கேற்ப சென்றார்.

தென் ஆஃப்பிரிக்காவில் நடைபெறுவது வெள்ளைக்காரர்களைக் கொண்ட சிறுபான்மை கட்சியினரின் ஆட்சியாகும். அங்கே பிழைப்புக்காக இந்தியர் பெரும் பகுதியினர் சென்று குடியேறினார்கள். அவர்களில் தமிழ் மக்களே அதிகமாக இருந்தார்கள்.

இந்தியர்களை வெள்ளையர் அங்கே மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்: அவமானப்படுத்தினார்கள்; கூலிகள் என்று இழிவாகப் பேசிக் கேவலமாக நடத்தினார்கள்: கருப்பர்கள் என்றனர்; நாகரிகமற்றவர் என்று நகைத்தார்கள்; அடிமைகளைப்போல கீழ்மட்ட வேலைகளிலே ஈடு படுத்தினார்கள். இவ்வளவு துராக்கிரதத் துயர்களைச் சகித்துக் கொண்டுதான் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அங்கே வாழ்ந்தார்கள்.