பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கவிக்குயில் சரோஜினியின்

காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, பலமுறை சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தினார்; காரணம், அவர் கண்ணெதிரேயே இந்திய மக்கள் கடுமையாகக் கேவலமாக அவமதிக்கப்பட்டதுதா !

அகிம்சா போராட்டங்களை அங்கே அறப்போரிகளை நடத்தி வெற்றி பெற்றவர் காந்தியடிகள். அந்த வெற்றி பெருமையினால் விளைந்த கௌரவத்தை, புகழை, சாதனைச் சம்பவத்தின் பலனை இந்தியருக்காக அங்கேயே விட்டு விட்டு, காந்தி பெருமான் தனது தாயகமான இந்தியாவுக்கு 1914-ம் ஆண்டு வந்தார்!

தென் ஆப்பிரிக்கப் பிரதமராக அப்போது பதவியில் இருந்தவர் ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவர். இந்த மனிதன் தான் காந்தியடிகளாரைக் கைது செய்து முதன் முதலாகத் சிறைக்குள் அடைத்தவர்.

அதற்காக அண்ணல் காந்தியடிகள் ஸ்மட்ஸை தனது விரோதியாக நினைக்கவில்லை; அவர் கடமையை அவர் செய்தார்; இவர் உரிமைக்காகப் போராடினார்! ஆனால், கடைசிவரை ஜெனரல் ஸ்மட்சும்-காந்தியடிகளும் அரசியல் நண்பர்களாகவே நடமாடினார்கள். பதினொன்று ஆண்டுகள் அவர்கள் தொடர்பு தென்னாப்பிரிக்காவில் நீடித்தது.

ஜெனரல் ஸ்மட்ஸ் நிறவெறியர்; அதனால் காந்தியடிகள், இந்தியா திரும்பியதும், மீண்டும் நிறவெறி வேதாளம் முருங்கை மரம் மீது ஏறிக் கொண்டு தலை கீழாகவே தொங்க ஆரம்பித்தது.

தென் ஆப்ரிக்க இந்தியர்களுக்காக அங்கே தங்கி அரும் பணியாற்றி, சிறை மீண்டு என்று இந்தியா திரும்பினாரோ அதற்குப் பிறகு மீண்டும் அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவில்லை.

அயல் நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஏதாவது நன்மைகள் புரிய நாட்டம் இருந்தால், முதலில் இந்தியா