பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

65

சுதந்திரம் அடைந்தால்தான் செய்ய முடியும் என்று காந்தியடிகள் உணர்ந்தார்.

இந்தக் காரணத்தால்தான் அவர் இந்திய விடுதலைக்காகவே முழுமூச்சுடன் பாடுபட்டார். தென் ஆப்ரிக்காவுக்கு மீண்டும் போகவே அவருக்கு விருப்பமும் இல்லை, மனமும் இல்லை. தென் ஆப்பிரிக்க மக்கள் பழைய பாசத்தோடு அடிகளாரை பன்முறை அழைத்தும் அங்கே போகாமலேயே இருந்து விட்டார்.

கென்யா நாட்டில் வாழ்ந்த இந்தியர்களும் துன்பப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் தங்களது உரிமைக்காக மாநாடு ஒன்று நடத்தி அரசுக்கு உணர்த்திட எண்ணினார்கள்.

அந்த மாநாட்டுக்குத் தலைமை தங்கிட கென்யா மக்கள் காந்தியடிகளாரை அல்லது சரோஜினி தேவியை 1924-ம் ஆண்டு அழைத்தார்கள்! அந்த அழைப்பை ஏற்று காந்தியடிகளுக்குப் பதிலாக கவியரசியை அனுப்புவது என்று காங்கிரஸ் மகாசபை எண்ணியது.

கிழக்கு ஆப்பிரிக்கா காங்கிரஸ் மகாசபை நடத்திய அந்த மாநாட்டுக்கு கவியரசி சரோஜினி தலைமை வகித்தார். இந்த மாநாடு மொம்பசா நகரில் நடந்தது. அங்கே அவர் பேசும்போது:

"இந்தியாவில் உள்ள ஓர் இந்தியன் உயிரோடு இருக்கும்வரை வெள்ளையர்கள் அக்கிரமச் செயல்களை எதிர்த்துப் போராடியே தீருவான்; அதற்குரிய தண்டனைகளும் கிடைத்தே தீரும்" என்று தென்னாப்பிரிக்காவிலே வாழ்கின்ற இந்தியர்களே தைரியமாகக் கூறுங்கள் என்று இந்தியர்களுக்கு ஊக்கம் தந்தார்.

நாயுடு பேசியபேச்சிலே வந்து விழுந்த சொற்சிலம்பங்கள், தெளிவான கருத்துக்கள், கோர்வையான பேச்சுத்