பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

71

உலகம் உயர்வடைவதற்காக உன்னதமான அளவிட முடியாத தியாகங்களைச் செய்துள்ள மகாத்மாக்களை ஈன்ற இந்தியா, நிறவெறி கொண்ட தென்னாப்பிரிக்க வெள்ளையரிடமிருந்து எதுவும் கற்க வேண்டிய தேவை அவசியமில்லை என்றார் தேவி.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த வெள்ளைக்கார உதவி மேயர் ஊமையரானார்! மக்கள் தேவி பேச்சைக் கேட்டு ஆரவாரமிட்டு குரல் எழுப்பினார்கள்.

தென்னாப்பிரிக்காவின் முடிசூடா மன்னராக இருந்தவர் பிரதமர் ஜெனரல் ஸ்மட்ஸ்! இவர் சிறந்த அரசியல்வாதி மட்டுமன்று; ராஜதந்திரியும் கூட!

இந்த மனிதர்தான் மகாத்மா காந்தியடிகள் சிறை வாழ்வுக்கு முதன்முதலில் அடிப்படை அமைத்து சிறையில் பூட்டியவர் இருந்தாலும், காந்தியடிகளின் நண்பராகவே கடைசி வரை இருந்தார்!

அத்தகைய சிறந்த ஓர் அற்புத அரசியல்வாதியான ஜெனரல் ஸ்மட்சுக்கும், இனவெறி எரிச்சல் ஏற்பட்டதால் கவியரசி சரோஜினி தேவியுடன் நேருக்கு நேராக வாக்கு வாதம் செய்திட ஒரு வாக்குப்போரே தொடுத்துவிட்டார்.

கவிக்குயில் சரோஜினி தேவி அவர்களே! சுயராஜ்யம் என்றால் என்ன? இந்தியாவில் எண்ண முடியாத ஜாதி பேதங்களையும்-உயர்வு தாழ்வுகளையும், தீண்டாமையையும் வைத்துக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு வந்து சமத்துவம் பற்றிப் பேசிட எப்படித் துணிவு பெற்றீர்?" என்று சிரித்துக் கொண்டே பிரதமர் ஸ்மட்ஸ் சரோஜினி தேவியைக் கேட்டார்.

அதற்கு நமது கவிக்குயில் பதில் கூறியபோது; "இந்தியாவில் உள்ள ஜாதி, சமூக பேதங்களை விட நூறு