பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கவிக்குயில் சரோஜினியின்

ஆயிரம், மடங்கு மிகுதியான நிறபேத உணர்ச்சியும், ஆங்காரமும் ஐரோப்பியரிடம் காணப்படவில்லையா?"

வேற்றுமைகளை எல்லாம் களைய எங்கள் தேசியவாதிகளும், சீர்திருத்தச் செம்மல்களும் அயராது உழைக்கின்றார்கள். அதே நேரத்தில் பிரதமர் ஸ்மட்ஸ் கேட்ட "சுயராஜ்யம் என்றால் என்ன?" என்பதற்கும் தான் விளக்கம் தருகிறேன்:

"நிர்வாகத்தின் பொறுப்பு முழுவதையும் ஏற்பதும், அயல் நாட்டுக் கொள்கையை வகுப்பதும் அயல்நாடுகளுடன் ராஜதந்திர உறவு கொள்வதும், போரைப் பற்றியும், அமைதியைப் பற்றியும் தீர்மானிப்பதுமான சுயராஜ்ய அதிகாரங்களை எல்லாம் மக்கள் அடைவதற்கு இந்தியா பணியாற்றிட உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவிலும், இந்தியர் குடியேறியுள்ள நாடுகளிலும் இந்த உரிமையைத்தான் இந்தியர்கள் வெள்ளையர்களைக் கேட்கிறார்கள் அவற்றை எம் மக்கள் அடையத்தான் போகிறார்கள் அதுதான் சுதந்திரம்; சுயராஜ்யம்; விடுதலை புரிகிறதா பிரதமர் அவர்களே!

வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை கூலிகள் என்றே அழைக்கிறார்கள்; அது பெரிய இந்தியச் கோடீஸ்வரனாக இருந்தாலும் இங்கே அவனும் "கூலி" தான்! இந்தியர்களை இவ்வாது இளப்பமாக பேசிய இனத் திமிருக்குச் சரோஜினி தேவி பலரறிய அங்கே கசையடி கொடுத்தார்!

"இந்தியரை வெள்ளையர்கள் கூலிகள் என்கிறார்கள். கூலிகள் என்றால் பொருள் என்னவென்று ஐரோப்பியர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்காக நான் இப்போது அதை விளக்குகிறேன். அவர்களுக்கும் பொருள் புரிந்து விட்டால் பிறகு 'கூலிகள்' என்று இந்தியரை அழைக்க மாட்டார்கள் அல்லவா?