பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

கவிக்குயில் சரோஜினியின்

தொடுத்த ஸ்மட்சும், வழக்குத் தொடுப்பேன் என்ற ஆங்கில சென்னை அரசும், ‘மன்னிப்புக்கேள்’ என்று மருள் வாதமிட்ட மந்திரி மாண்டேகும் வெகுண்டு போனார்கள்; வெகுண்டார்கள்.

கவியரசி சரோஜினி நாயுடு தனது உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார். கூற வேண்டுமா எப்படிப்பட்ட வரவேற்பு பெற்றிருப்பார் என்று; அப்பப்பா... பம்பாய் மாநகரில் அவர் மாபெரும் வரவேற்பைப் பெற்றார்; கவியரசியும் அதை ஏற்றார்.

பெல்ஹாம் நகரில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கூடியது, தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அந்த மகாசயை மாநாட்டில் கலந்து கொண்டு மாபெரும் மகிழ்ச்சி பெற்றார்கள், டாக்டர் அப்துல்ரஹ்மான் என்பவர் தென்னாப்பிரிக்கா மகாசபை அணிக்குத் தலைமை வகித்து கலந்து கொண்டார்.

அந்த அணிக்கு தலைமை வகித்த ரஹ்மான் மகா சபையில் பேசும் போது:

"தென்னாப்பிரிக்க இந்தியராகிய நாங்கள் உங்களுக்கு மகாத்மா காந்தியடிகளைக் கொடுத்துள்ளோம், அவருக்கு நிகராக விளங்கும் சரோஜினி தேவியாரை எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால், மறுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்தியாவின் மாதர்குல விளக்காகவும், பெண்கள் விழிப்புணர்ச்சிகளுக்கு வித்தாகவும் விளங்கும் சரோஜினி தேவியார் இந்திய மக்களிடையே ஓர் அரசியல் எழுச்சியை உருவாக்கி வருகிறார். அவர் உங்களுக்கு மிகவும் தேவையானவர் என்பதை நான் அறிவேன்.

தென்னாப்பிரிக்காவில் அவர் பேசிய பேச்சுக்கள் ஆற்றிய பணிகள் எங்களை மிகவும் கவந்து விட்டன.