பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கவிக்குயில் சரோஜினியின்

எனது நாட்டுச் சகோதரிகளை மானபங்கம் செய்த சண்டாளர்களை, பிரிட்டிஷ் ஆட்சி தண்டிக்காமல் விட்டது ஏன்?"

இப்படிப்பட்ட பயங்கரக் காட்டுமிராண்டித்தனம் செய்த டயர் என்பவனது அராஜகத்தைப் பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டலாமா? நீதியா அது?”

அப்போது கூட்டத்தில் இருந்த மக்கள் வெட்கம், வெட்கம் என்று ஓங்காரக் குரலிட்டு முழக்கமிட்டார்கள். பேச்சைக் கேட்க வந்த வெள்ளைக்காரர்கள் பலர் தேவியின் வீர உரையால் எழுந்த கோஷங்களைக் கேட்டுத் தலைகுனிந்து வெளியேறினார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் செய்யும் ஆட்சியைப் பற்றி வெள்ளையர்களிடம் அதுவரை ஒரு நல்ல எண்ணம் இருந்தது. சரோஜினி தேவியின் அந்த கடல் கொந்தளிப்பான உரை, பிரிட்டிஷ் ஆட்சியை நிலை குலைய வைத்த கெட்டப் பெயரை உருவாக்கி விட்டதை அன்று லண்டன் மாநகரமே பெருமூச்சு விட்டு அவமானம் அடைந்தது. இத்தகைய ஓர் ஆட்சியை அம்பலப்படுத்ததான் உலகில் நடைபெற்ற பல வகையான ஆட்சிகளைப் பற்றி தேவி விமர்சனம் செய்தார்!

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அன்று இந்திய மந்திரியாக இருந்தவர் மாண்டேரு என்ற ராஜதந்திரி! அவர், சரோஜின் தேவியை நோக்கி, நீங்கள் மேடையில் பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறியதற்காக அவற்றை மீண்டும் வாபஸ் பெற்று, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அறை கூவலை விட்டார்!

சரோஜினி தேவி அந்த அறைகூவலை ஏற்று, ஆவர் வார்த்தைகளுக்குத் தக்கக் கடிதம் எழுதி மறுத்தார். அப்போது, கானாட்டுக்கோமகன் இந்தியாவிற்குவரும் வாய்ப்பு