பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

85

கவியரசி சரோஜினி தேவி இந்த தனிநபர் இயக்கத்தை திட்டமிட்டு ஆங்காங்கே நடத்திடப் பணிபுரிந்தார்! அவரது முயற்சி இயக்கத்தின் வேகத்தை மென்மேலும் தீவிரமாக்கியது.

சத்தியாக்கிரம் செய்து மீண்டும் சிறையேகினார்! சிறை புகுந்த சரோஜினி தேவிக்கு மேலும் உடல்நலம் சீர்குலைந்தது; பிரிட்டிஷ் அரசு அவரை உடனே சிறையிலே இருந்து விடுவித்து விட்டது.

சத்தியாக்கிரகப் போராளிகள் எல்லாரும் சிறையிலே மெலிந்து, நலிந்து, குலைந்து, வாடும் போது, தாம் மட்டும் வெளியே இருப்பதா என்று நினைத்தக் கவிக்குவில் மீண்டும் சத்தியாக்கிரக அறப்போரிலே கலந்து சிறைப்புகத் திட்டமிட்டார். காந்தியடிகள் அம்மையாரைத் தடுத்து நிறுத்தி, ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு பணித்தார்.

தலைவர் உத்தரவுக்கு ஏற்ப, சிறைபுகும் எண்ணத்தைக் கைவிட்டார் நாயுடு. அதனால், வெளியிலே இருந்தவாறு, தொண்டர்களுக்கு ஊக்கமூட்டிப் போராட்டத்தை நடத்திடும் தூண்டுகோலாகவே அவர் செயல்பட்டார்.

அப்போது இந்தியருடன் சமரசப் பேச்சை நடத்திட இங்கிலாந்திலே இருந்து ஸ்டாப் போர்டு கிரிப்ஸ் என்பவர் 1942ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியா வந்தார். தலைவர்களை விடுதலை செய்யுமாறும், அவர்களுடன் கலந்துரையாடிக் கருத்தறிய வேண்டும் என்றும் கிரிப்ஸ் வந்ததை அறிந்த வெள்ளையர் ஆட்சி காங்கிரஸ் தலைவர்களை சிறையினின்று விடுதலை செய்தது.

ஸ்டாப்ஃபோர்டு கிரிப்ஸ் திட்டத்தைக் காந்தியடிகள் நிராகரித்தார்! கிரிப்ஸ் தூது தோல்வி கண்டதால், பிரிட்டி-

ச.க-8