பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கவிக்குயில் சரோஜினியின்

ஷார் எரிச்சல் அடைந்தார்கள் அடுத்த அடக்குமுறைத் திட்டத்தை எப்படி உருவாக்கலாம் என்று யோசனை செய்து கொண்டே இருந்தார்கள்.

அரசியல் நிலமைகளையும், போர்க்காலச் சூழல்களது போக்கையும் கண்ட அகிம்சா மூர்த்தி காந்திமகான், இது தான் தக்க சமயம் என்று எண்ணி 'Quit India' வெள்ளையனே வெளியேறு, 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே வெளியேறு' என்ற போராட்டத்தைத் துவக்கத் திட்டமிட்டார்.

அகில இந்திய காங்கிரஸ் க்ட்சி 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் நாள் பம்பாய் மாநகரில் கூடி, "ஹரிஜன்" பத்திரிகையிலே மகாத்மா எழுதிய அரசியல் கிளர்ச்சித் திட்டத்தைத் தீர்மானமாக நிறைவேற்றியது.

அந்தத் தீர்மானம் தான் 'க்விட் இண்டியா' என்ற வெள்ளையனே வெளியேறு' தீர்மானமாகும். காந்தியடிகள் இந்தத் தீர்மானத்தின் மீது பேசும்போது, 'இது தான் எனது இறுதிப் போராட்டம் என்று போர்ப்பிரகடனமாக திட்டத்தை ஆதரித்தார்.

அவ்வளவுதான், மறுநாள் விடியல் நேரம்; புலராத பொழுது; அதிகாலை பொழுது காந்தி பெருமானும், பல முக்கிய தலைவர்களும், சரோஜினி தேவியும் கைது செய்யப்பட்டு, பலாத்காரமாக சிறையில் அடைக்கப்பட்டார்கள்! மக்களும் நாடெங்கும் தீப்பொறி பறக்கும் காற்றுபோல முக்கிய நகரங்களிலே வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

மறுநாள் தலைவர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீபோல நாடெங்கும் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் ஆங்காங்கே கூடினார்கள். பெரும் புரட்சியாளர்களாக மாறிவிட்டார்கள்.