பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

95

பெண் குலத்திற்கு சரோஜினி ஒரு மனப்பாடமாக இன்றும் நின்று நிலவுகிறார். சிறுமியாக இருந்தபோதே அவர் கவிபாடும் திறன் பெற்றிருந்தார். அதற்காகவே அவர் அயராது உழைத்து வாழ்ந்தார். குமரியான உடனே அவரது பாடல்கள் உலகத்தையே மெய்மறக்க வைத்தவையாகப் பாராட்டுப் பெற்றன.

மகாகவி ரவீந்திரநாத் தாகூர் பெற்ற 'கெய்சர் ஹிந்த்' என்ற விருதை, பிரிட்டிஷாரால் வழங்கிப் பாராட்டும் அளவுக்கு அவர் புலமை பெற்றது பெண்ணினத்துக்குரிய ஒரு பெருமையாக விளங்கியது.

தாய்க்குலம் கவனிக்கப்பட வேண்டிய படிப்பினைகள் என்னவென்றால்;

சரோஜினி தேவி தேசப்பக்திக்கே முதலிடம் தந்தார்; அதற்கு முன்னால் தனது சொந்த சுகபோக வாழ்க்கையை தூக்கி எறிந்தார். தியாகம் செய்ய எந்த ஆண் வேண்டுமானாலும் முன்வரக்கூடும்; ஆனால், சரோஜினி தேவி ஒரு பெண்! பருவ மங்கை, குமாரி இளமை எழிலாடும் இன்ப வாழ்வைப் பெற்றாக வேண்டிய வயது.

கணவன் இருக்க, செல்வச் செழிப்புத் தவழ, குழந்தை பேறு பூரிப்போடு காட்சிதர, பட்டம், பதவி, படிப்பு, சொல்வன்மை, அறம்பிறழ் நெஞ்சம் இத்தனையையும் இழந்து தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பண்பு எந்த பெண்ணுக்கு வரும் இந்த மனம் வியப்புக்குரிய ஒரு இயற்கை மனமல்லவா?

அன்னி பெசண்டுக்கு மதக் கொடுமைகள், கணவன் கொடுமைகள், பணிபுரிந்து வருவாய் தேட முடியாத சூழ்நிலை, தாய்வீட்டு ஆதரவோ, கணவன் ஆதரவோ, உடன்