பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16

என்ற சோழ மண்டல சதக மேற்கோள் பாடல், இவரை

இப்பெயரால் பாராட்டுகின்றது.

சருவஞ்ளு கவி

தக்கயாகப் பரணியில் டாகினிகள் என்னும் சொல் வருகின்றது. ' தமிழில் டா மொழிக்கு முதலில் வராது. அவ்வாறிருக்க இவர் அமைத்திருத்தல் இவர் சருவஞ்ளு கவியாய் இருத்தல் காரணமே என்று உரையாளர் விளக்குவர். இவ்விளக்கத்தால், இவர் வடமொழிக் கடலைக் கடந்தவர் என்பது பெறப்படும். பல மொழிகளும் நன்கறிந்து எல்லாப் பொருள்களையும் எளிதில் பாடும் ஆற்றல் பெற்றிருந்தமையால் இப்பெயரால் சிறப்பிக்கப் பெற்றார். தக்கயாகப் பரணியில் இவருக்குள்ள யாமள நூற்’ பயிற்சியை அறிகிறோம். இப்பயிற்சி மிக்க தமிழறிஞர் இவர் ஒருவரே.

ஊழுக்குக் கூத்தன்

காசுக்குக் கம்பன்' என்ற பழம்பாடல் தேசு பெறும் ஊழுக்குக் கூத்தன்' என்று சிறப்பிக்கின்றது. கூத்தர் சொல் வாழ்த்தாயினும் சாபமாயினும் ஊழ்வலி போலத் தப்பாது பயன் தந்தமையால் இச்சொல் எழுந்தது போலும் என்பர் இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள்.

பிறந்த மரபு

செங்குந்த மரபினர் வீரவாகுதேவர் முதலிய முருகக் கடவுளின் வழித்துணைவர்கள் ஒன்பதின்மர் வழித் தோன்றினவர் என்று கூறுவர். குந்தம் என்னும் வீரப் படைக்கு உரியார் செங்குந்தராவர்.

_

15. சோழமண்டல சதகம், 93. 16. தக்கயாகப் பரணி, தாழிசை, 433.